புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013

கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்தவே வேண்டும் : ஐ.தே.க.

வட மாகாண சபைத் தேர்­தலில் தமிழ் மக்­களின் அமோ­க­மான ஆத­ரவு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு கிடைத்­துள்­ள­மையின் கார­ண­மாக தேசிய பிரச்­சினைத் தீர்வு உள்­ளிட்ட எந்த விட­ய­மா­னாலும்
அர­சாங்கம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் தனித்து பேச்சு நடத்­தியே ஆக­வேண்டும் என்று பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் திஸ்ஸ அத்­த­நா­யக்க தெரி­வித்தார்.
அவ்­வாறு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் அர­சாங்கம் பேச்சு நடத்­தா­விடின் அது வடக்கு மக்­களின் ஆணையை புறக்­க­ணிப்­ப­தா­கவே அமையும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
வடக்குத் தேர்­தலில் வெளி­வந்­துள்ள முடி­வுகள் குறித்து எங்­க­ளுக்கு எந்தப் பிரச்­சி­னையும் இல்லை. பிர­தேச ரீதி­யான அந்தத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெற்­றி­பெ­று­வது நியா­ய­மா­ன­தாகும். ஆனால் ஜனா­தி­பதித் தேர்­தலில் வடக்குத் தமிழ் மக்கள் எம்­மு­ட­னேயே இருப்­பார்கள் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ad

ad