புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2013

ஈ.பி, புளொட், ரெலோ சத்திய பிரமாணம் எடுக்காததன் பின்னணியில் சிறிலங்கா உளவுத்துறை-THANKS THINAKATHIR 

இந்த செய்திக்கு சம்பந்தப்பாடோர் மற்றும் விமர்சகர்கள் கருத்துக்களை நாகர்ரீகமாக பத்த்ரிகை சுதந்திர அல்லாக்கு உட்பட்டு எழுதலாம் வெளியிடுவோம் 
Published on October 12, 2013-1:51 pm   ·   No Comments
ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ இயக்கங்களை சேர்ந்த 8 மாகாணசபை உறுப்பினர்களும் யாழ். நகரில் தந்தை செல்வா சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சம்பந்தன் முன்னிலையில் சத்திய பிரமாண நிகழ்வை புறக்கணித்ததற்கு ஸ்ரீலங்கா உளவுப்பிரிவே காரணம் என நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த தகவல்கள் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருடன் தொடர்புகளை பேணிவரும் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய ஒருவர் தெரிவித்தார்.

புளொட் சித்தார்த்தனிடம் தொடர்பு கொண்ட சிறிலங்கா உளவுத்துறை தமிழீழ கோரிக்கையை முன்வைத்த செல்வநாயகத்தின் சிலைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு நடத்தப்படும் சத்தியபிரமாண நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
தந்தை செல்வநாயகம் சிலைக்கு முன்னால் நடைபெறும் நிகழ்வுகளில் கண்டிப்பாக கலந்து கொள்ளக் கூடாது என சிறிலங்கா புலனாய்வுப்பிரிவு ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகிய இயக்கங்களுக்கு அறிவுறுத்தியதாக தெரியவருகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தி அதனை பலவீனப்படுத்தவதற்காக கங்கணம் கட்டி செயற்பட்டு வரும் சிறிலங்கா புலனாய்வு பிரிவினர் புளொட் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன் ஊடாக மிக நேர்த்தியாக காரியங்களை கையாண்டு வருவதாக தெரியவருகிறது
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தவதற்காக கங்கணம் கட்டி நிற்கும் சிறிலங்கா உளவுத்துறை முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் மிக இலகுவாக தொடர்புகளை ஏற்படுத்தி குழப்பங்களை உருவாக்கி வருவதாகவும், மாற்று அணியாக இருக்கும் 9 பேருடன் மேலும் நான்கு பேரை இணைத்துக்கொண்டால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் வடமாகாணசபையை கொண்டு வரலாம் என்றும் சிறிலங்கா உளவுத்துறை முயற்சிகளை எடுத்து வருகிறது.
சிறிலங்கா உளவுத்துறையின் வழிகாட்டலின் கீழ் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் சத்தியபிரமாண நிகழ்வை புறக்கணித்தனரே தவிர கட்சி முரண்பாடல்ல என நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் பின்னணியில் சிறிலங்கா உளவுத்துறையுடன் ஆனந்தசங்கரியும் இருப்பதாகவும், விக்னேஸ்வரனை பதவியிலிருந்து இறக்கி விட்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் வடமாகாணசபை கொண்டு வரப்படும் போது ஆனந்தசங்கரிக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்களான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற இயக்கங்களுக்கும் சிறிலங்கா உளவுத்துறைக்கும் உள்ள தொடர்பாடல்கள், மற்றும் அவர்களின் எதிர்கால திட்டங்கள் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று விரைவில் தினக்கதிரில் வெளியாகும்
- See more at: http://www.thinakkathir.com/?p=53124#sthash.mRL5THhR.dpuf

ad

ad