புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2013

ரணில் வெளிநாடு பயணம்! தலைமைத்துவ சபை விவகாரத்தில் முறுகல்! பல சிரேஷ்ட தலைவர்கள் விலகத் தீர்மானம்
ஐ. தே. க. வின் தலைமைத்துவ அதிகார மாற்றங்கள் தொடர்பாக நியமிக்கப்படவுள்ள உத்தேச கட்சித் தலைமைத்துவச் சபை பற்றிய பிரேரணையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக ஐ. தே. க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கட்சியின் தலைமைத்துவ சபை தொடர்பாக கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோருடன் ரணில் விக்ரமசிங்கவே பேச்சுவார்த்தை நடத்த இருந்தார்.
இருந்தும் ரணில் விக்ரமசிங்க அதனைத் தவிர்த்து கபீர் ஹாஸிமை அதற்காகப் பெயரிட்டு வெளிநாடு சென்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரணில், சஜித், கரு ஆகியோர் சந்திக்க இருந்தாலும் கட்சித் தலைவர் இன்றி கபீர் ஹாஸிமைச் சந்திப்பது தொடர்பாக சஜித்தும், கருவும் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனராம்.
தேசிய பிக்குமார் முன்னணியின் பிரதம போஷகரான கிராம்பே ஆனந்த தேரர் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கிய ஏழு பிரேரணைகளை எதிர்க்கட்சித் தலைவர் 19 வரை அதிகரித்துள்ளார்.
இது தொடர்பாக கட்சித் தலைவர் தலைமைத்துவக் குழு தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கவில்லையானால் ஐ. தே. கட்சியின் சிரேஷ்ட பிரமுகர்கள் பலர் செயற்குழுவிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ad

ad