புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2013

 முதல்வர் செய்த முதல் பணி 
news
வடக்கு மாகாண முதலமைச்சராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் தனது முதல் பணியாக முதியோர் தினமான நேற்று சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.

 
அத்துடன் அங்கு வசிக்கும் 101 வயதுடைய மூதாட்டி ஒருவர் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
 
வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியிடம் இருந்து நேற்றுக் காலை தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அங்கிருந்து நேரடியாக சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியயோர் இல்லத்துக்குச் சென்றார். 
 
முதியோர் தினமான நேற்று அவர் அங்கிருந்து முதியோர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் அவர்க ளுக்கு உணவுப் பொருள்களையும் வழங்கினார். அங்கு வசிக்கும் 101 வயதுடைய மூதாட்டி தனது தள்ளாத வயதிலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தார். 
 
அவருடன் அளவளாவிய முதலமைச்சர், தமழர்களின் உரிமைக்காக தனது வாக்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்து அதன் வெற்றிக்கு உதவி புரிந்த அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 
 
முதல்வராக நியமனக் கடிதம் பெற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதல் பணி இதுவாகும்.

ad

ad