புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2013

ஐ.நா சட்டக்குழுவில் இலங்கை: ஏமாற்றமளிப்பதாக கனடா தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபையின் ஆறாவது சட்டக் குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் நேற்று அந்த குழுக் கூடிய போது ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டார்.
பொதுச் சபைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் சட்டரீதியான கேள்விகள் குறித்து ஆராய்வதற்காக இந்த ஆறாவது சட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கும் குழுக்களில் இந்த சட்டக்குழுவானது முக்கியமான குழுவாகும்.
அதேவேளை இந்த குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டமை ஏமாற்றமளிப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் இலங்கையை ஐ.நா சட்டக்குழுவிற்கு தெரிவு செய்தமை ஏமாற்றமளிப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பாய்ர்ட் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் ஆறாவது சட்டக் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் இலங்கையின் பிரதிநிதி பாலித கோஹன ஆவார்.
1958 ஆம் ஆண்டு அன்றைய இலங்கையின் பிரதிநிதி சேர் க்ளேட் சி கொரோயா ஐ.நாவின் 5வது குழுவான வரவு செலவு குழுவில் இடம்பெற்றதுடன் 1960 ஆம் ஆண்டு முதல் குழுவான ஆயுத ஒழிப்பு குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.
இதனையடுத்து 33 வருடங்களின் பின்னர் ஸ்டென்லி கல்ப்பகே 1993 ஆம் ஆண்டு 4வது குழுவான காலனித்துவத்திற்கு எதிரான குழுவில் அங்கம் வகித்தார்.
20 வருடங்களுக்கு பின்னர் தற்போது ஐ.நா சட்டக்குழுவிற்கு இலங்கையின் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad