புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2013

பிபிசி நிருபர் யாழ் சென்று எடுத்த அடுத்த ஆவணப்படம் நேற்று மாலை வெளியாகியது!

போர் முடிவடைந்துவிட்டது. சமாதானம் வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் அங்கே உண்மையாக நடப்பது என்ன ?
இலங்கையின் இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஒரு சர்வதேச
விசாரணையை நடத்துவதற்கு ஒத்துழைப்பதற்கு முதற்தடவையாக இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
உலகில் நீண்ட காலம் நடந்த உள்நாட்டுப் போர் ஒன்று முடிந்து 4 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும், இலங்கையில் மனித உரிமைகள் என்பது இன்னமும் மிகவும் மோசமான நிலையிலேயே இருக்கின்றன.
இந்த மனித உரிமைகள் நிலவரங்களைக் காண்பித்தே சில கொமன்வெல்த் நாடுகள் கொழும்பில் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்க வேண்டும் என்று வாதிடுகின்றன.
ஆனால், இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்படும் போர் குறித்த விசாரணைகள் போதுமானவை என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் கூறுகிறார்.
இந்த நிலையில் இலங்கையில் போர் நடந்த வடக்கில் இருக்கும் நிலவரம் குறித்து ஆராயும் பிபிசி நிருபர் யாழ் சென்று எடுத்த அடுத்த ஆவணப்படம் நேற்று புதன்கிழமை மாலை வெளியாகியுள்ளது.
இலங்கையில் இளைஞர்களும் பெண்களும் இன்னமும் சித்திரவதைகளுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகி வருகிறார்கள் என்பதனை இந்த ஆவணப்படம் வெளிவாக எடுத்து காட்டுகிறது.
4 நிமிட நேரத்தில், இலங்கையில் தற்போது என்ன நடக்கிறது என்பதனை பிபிசி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

ad

ad