புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2013




             ரு காலத்தில் 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்ட பி.ஜே.பி. இன்று பிஸியான கட்சியாகிவிட்டது. மோடியின் திருச்சி மீட்டிங்கிற்குப் பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் படுபயங்கர பிஸியான தலைவர்களாகிவிட்டனர். மாநிலம் முழுவதும் அதிவேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் கட்சி வேலைகள், கூட்டணிப் பேச்சு வார்த்தைகளில் வேகமாக ஓடிக்கொண்டி ருக்கும் பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நக்கீரன் என்றதும் ""எங்கள் தலைவர் அடல்பிஹாரி வாஜ்பாயை தமிழகத்தில் வலுவாக அறிமுகப்படுத்திய பத்திரிகை அல்லவா'' என்று
புகழ்ந்துவிட்டு நம்மிடம் பேசினார்.

* மோடியின் திருச்சி விசிட், தமிழக பா.ஜ.க.விற்கு எந்த வகையில் உதவியுள்ளது?

பொன்.ராதாகிருஷ்ணன் : எதிர்கால இந்தியாவின் பிரதமர் பதவி வேட்பாளர் மோடி திருச்சிக்கு வருகிறார் என்கிற ஒரு தகவலே தமிழக மக்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான மக்களில், ஒரு பகுதி மக்கள் பி.ஜே.பி.க்கு எந்தவிதத்திலும் இதற்கு முன் தொடர்பில்லாத இளைஞர்கள். நரேந்திர மோடியின் பொதுக்கூட்டம், தமிழக பி.ஜே.பி.க்கு ஒரு புது ரத்தத்தைப் பாய்ச்சியுள்ளது.

வருகின்ற பாராளு மன்றத் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. முன்வைக்கும் வியூகம் என்ன?

பொன்.ராதாகிருஷ்ணன் : தமிழர், தமிழர் நலன் இதைத்தான் எங்கள் வியூக மாக நாங்கள் வைத்துள் ளோம். பாரதம், அன்னியர் களின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற தமிழர்கள் என்னென்ன தியாகம் செய்துள்ளார்கள். தமிழகத்திலும், அயல்நாடு களிலும் இருந்து தமிழர்கள் செய்த தியாகம் அளப்பரியது. அந்த தமிழினம் ஒட்டு மொத்த  இந்தியாவின் வளர்ச்சியோடு இணைந்து வளர வேண்டும். உலக அளவில் இன்று நிறைந்து வாழும் ஒட்டுமொத்த தமிழர் களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்பதே வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தமிழகத்தில் முன் வைக்கும் வியூகம்.

தமிழருவி மணி யன், பா.ஜ.க.வை வலுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் எந்த வகை யில் பா.ஜ.க.விற்கு பலனளித்துள்ளது?


பொன்.ராதா கிருஷ்ணன் : அவர்  தமிழகத்தில் உள்ள சிறந்த காந்தியவாதி. அப்பழுக்கற்ற தேசியவாதி. 2009-ல் காங்கிரஸ் கட்சி இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இணைந்து தமிழ் சமுதாயத்திற்கு செய்த துரோகம், தமிழருவி மணியன் போன்ற தேசிய வாதிகளை பாதித்திருக் கிறது. சோனியாவின் மகள் பிரியங்கா, வேலூர் சிறைக்குச் சென்று நளினியை சட்டவிரோதமாக சந்தித்துப் பேசியதில் தொடங்கி, சோனியா குடும்பம் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கு  விரோதமாகவே இன்றுவரை செயல்பட்டு வருகிறது. 2009-ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டு தமிழருவி மணியன் சில முயற்சிகள் எடுத்து வருகிறார். இவை இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது முயற்சிகள் பா.ஜ.க.விற்கு வலு சேர்த்து வருகிறது.

எத்தனைக் கட்சிகள் பா.ஜ.க. அணியில் இணைந்துள்ளன?


பொன்.ராதாகிருஷ்ணன் : பா.ஜ.க. அணியில் தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சி இணையப் போகிறது என்கிற ரகசியத்தை இப்போதே சொல்வது சரியாக இருக்காது. பல கட்சிகளுடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். அதை நாங்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்.

வைகோ வெளிப்படையாகவே பா.ஜ.க.வை புகழ்கிறார். அவர் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படும் என நம்பிக்கையோடு சொல்லி வருகிறாரே?

பொன்.ராதாகிருஷ்ணன் : ம.தி.மு.க. என்ன செயல் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது என எனக்குத் தெரியாது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் சில கருத்துகள் உண்டு. மரண தண்டனை விதிக்கப்பட்ட வர்கள் அந்தத் தண்டனை நிறைவேற்றப்படாமல் வாழ்வா? சாவா என தெரியாமல் செத்துப் பிழைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பல ஆண்டு காலம் நீடித்து நிற்கும் இந்த சிறை வாழ்வு மிகக் கொடுமையானது. காங்கிரஸ் அரசு புலனாய்வு செய்த பல வழக்குகள் இன்றளவிலும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப் படவில்லை. இந்திரா கொல்லப்பட்டபோது ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்கள் இறந்தது, ராஜிவ் கொலை வழக்கு போன்றவற்றில் முறையாக விசாரணை நடக்கவில்லை.

தமிழகத்தில் இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்த தீவிரவாதிகளை தமிழக போலீசார் பிடித்துள் ளார்களே?


பொன்.ராதாகிருஷ்ணன் : அவர்களை கைது  செய்ய தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து பாடுபட்ட ஆய்வா ளர் லட்சுமணன் உள்ளிட்ட தமிழக-ஆந்திர போலீசாரை நான் பாராட்டுகிறேன். தமிழகத்தில் முஸ்லிம் மத அமைப்பு களின் பெயரை பயன்படுத்தி சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் சிலர் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவதும் இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. அத்வானி இந்தியா முழுவதும் செல் கிறார்.  அவரைக் கொல்ல வேறெங்கும் முயற்சி நடக்க வில்லை. தமிழகத்தில் மட் டும் நடக்கிறது என்பதால், அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என கண்டு பிடிக்க வேண்டும். கொல்லப் பட்ட அரவிந்த் ரெட்டி, வெள்ளையப்பன், ஆடிட்டர்  ரமேஷ், குமார்... இவர்கள் யாரும் இஸ்லாமியர்களை அவமானப்படுத்தி பேசியவர் கள் இல்லை. கலவரச் சூழலே இல்லாத காலகட்டத்தில் அவர்களை ஆயுதம் எடுத்து கொலை செய்த இந்தத் தீவிரவாதிகளின் பின்னணியில் சில அரசியல் சக்திகள் இயங்குகிறது என நான் சந்தேகிக்கிறேன். அந்த சக்திகளை தமிழக போலீஸ் கண்டுபிடிக்க வேண்டும்.

ad

ad