புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2013

அரசுக்கு எதிரானவர்களை படுகொலை செய்த குழுவினர் பற்றிய விபரங்கள்! அம்பலப்படுத்தும் சிங்கள இணையம்!
இலங்கையில்  ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அவரது அரசுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பான விபரங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளதாகச் சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் படுகொலைகளைச் செய்தவர் யார் என்பது குறித்த தகவல்களையும் அந்த இணையம் அம்பலப்படுத்தியுள்ளது.
இதன்படி அரசுக்கு எதிரானவர்களைப் படுகொலை செய்யும் குழுவின் பிரதான சூத்திரதாரியாக இலங்கை அமைச்சரவையின் சக்தி வாய்ந்த அமைச்சு ஒன்றின் செயலாளரே செயற்பட்டுள்ளார்.
இவரின் கீழ் மேலும் பல முக்கிய புள்ளிகள் செயற்பட்டு வந்துள்ளன.
இவ்வாறான கொலையாளிகளில் ஒருவராகச் செயற்பட்டவர்களில் சுனந்த லியன பத்திரன என்வரும் ஒருவராவார்.
இவர் கொழும்பு, மாநகர சபை உறுப்பினரான தேவிகா லியன பத்திரவின் கணவராவார்.
இவர் அரச சபை ஒன்றில் உயர் பதவி வகித்து வந்த நிலையில் கோடிக்கணக்கான ரூபா நிதியை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இருப்பினும் பின்னர் உயர்மட்ட அழுத்தம் காரணமாக இவர் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டார்.
அரசுக்கு எதிரானவர்களைப் படுகொலை செய்யும் திட்டம் கொழும்பு, நாராஹேன்பிட்டியிலுள்ள வீடொன்றிலிருந்தே தீட்டப்பட்டு வந்தது.
2005 ஆம் ஆண்டு தொடக்கமே இந்த வீடு படுகொலைத் திட்டமிடும் களமாக அமைந்து வருகிறது.
இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 25 பேரும் இந்தப் படுகொலையாளிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
அரசுக்கு விரோதமானவர்களைக் கடத்தச் செல்லும் போது இவர்கள் இராணுவ உடையிலேயே செல்வர்.
இவர்களுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் இலங்கை அரசே வழங்கி வருகிறது.
இவர்களுக்கான வாகன வசதிகளை அமைச்சர் ஒருவரின் செயலாளரே வழங்கி வருகிறார் என்றும் அந்த இணையம் தெரிவித்துள்ளது

ad

ad