புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2013

இராஜினாமா செய்யும் யோசனையை கைவிட்டார் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைமைப் பதவியை இராஜினாமா செய்யும் யோசனையை பலருடைய வேண்டுகோள்களுக்கு அமைய கைவிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடமாகாண சபையில் வன்னி மாவட்டத்திற்கென அமைச்சுப் பதவியொன்று வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் கட்சித் தலைமை அந்தப் பதவியை யாழ். மாவட்டத்தில் சிவாஜிலிங்கத்திற்கு வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தது.
கட்சி முடிவு எடுத்தபோதிலும் வன்னி மாவட்ட மக்களுக்குப் பொறுப்பு கூறும் வகையில் தலைமைப் பதவியை ராஜினாமா செய்ய உத்தேசித்திருந்தேன்.
ஆனால் எனது இந்த நடவடிக்கை கட்சியின் செயற்பாட்டுக்கும் மாகாண சபையின் செயற்பாடுகளுக்கும் ஆரோக்கியமாக இருக்க மாட்டாது என்று சுட்டிக்காட்டி எனது இராஜினாமா யோசனையைக் கைவிடுமாறு பலரும் கேட்டுக் கொண்டனர்.
அந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத் தன்மைமையை உணர்ந்து எனது இராஜினாமா யோசனையைக் கைவிட்டுள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ad

ad