புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2013

முகநூல் தகவல்களை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
முகநூல் மோகம் சிறுவர் சமூதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது.
முகநூல் பயன்பாட்டை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாது என்ற போதிலும் வேறும் வழிகளில் தடை செய்ய முடியும்.

பௌத்த சிறுமிகள் நாட்டின் எதிர்காலமாக கருதுகின்றேன். முகநூல் மோகத்தில் வாழ்க்கயை வீணாக்கிவிடக் கூடாது.
நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக இளைய தலைமுறை செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பாணந்துரை சிறி சுமங்கல வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முகநூல் தடை செய்யப்படுமா? எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி
சமூக வலைத்தளமான முகநூல் இலங்கையில் தடை செய்யப்படுமா என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஆளும் கட்சியின் கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, அப்படியான எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை என பதிலளித்தார்.
எவ்வாறாயினும் பாணந்துறை சுமங்கள பாலிகா பாடசாலையில் வைபவம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முகநூல் பெரியோருக்கும் பிள்ளைகளும் ஒரு தொற்று நோய் என தெரிவித்திருந்தார்.
அந்த இணையத்தளத்தை தடை செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் உள்ளன. சட்டத்தின் மூலம் இதனை செய்ய முடியும். இதனால் முகநூல் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என கூறினார்.
இதனை மேற்கோள் காட்டியே எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

ad

ad