புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2013

உலகில் மிகப் பெரிய அமைச்சரவையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையை கின்னஸ் சாதனை புத்தகம் தெரிவு செய்துள்ளது.
2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி பதவியேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் 52 பேர் இடம்பெற்றனர்.

இதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதுடன் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்தது.
கின்னஸ் சாதனை புத்தகத்தின் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் இன்றும் புதிய பிரதியமைச்சர்கள் பலர் பதவியேற்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
சனத் ஜயசூரிய உள்ளிட்ட ஒன்பது பேர் பிரதி அமைச்சர்களாக நியமனம்
இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட ஒன்பது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதி அமைச்சர்களின் விபரம்
சனத் ஜயசூரிய
ஹெமால் குணசேகர
மொஹான் லால் க்ரேரு
நிசாந்த முத்துஹெட்டிகம
சரத் முத்துகுமார
லக்ஸ்மன் பெரேரா
சரத் வீரசேகர
வை.ஜீ. பத்மசிறி
அன்தனி விக்டர் பெரேரா ஆகியோரே இவ்வாறு பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ad

ad