புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2013


திரைக்கூத்து
கொக்கரக்கோ...!


"வாலு' வம்பு!

சிம்பு-ஹன்ஸிகா நடிக்கும் "வாலு' படம் பூஜை போடப்பட்ட போதே "2013 தீபாவளி ரிலீஸ்' என விளம்பரம் செய்திருந்தனர். 2013 தீபாவளி வரப் போகிறது. ஆனால் படப்பிடிப்பை முடித்துத் தராமல் இருந்தார் சிம்பு.


போதாக் குறைக்கு காமெடி நடிகர் வி.டி.வி.கணேஷ் கதைநாயகனாக நடித்து வரும் "இங்க என்ன சொல்லுது' படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து முடித்துவிட்டார் சிம்பு.

அடுத்து பாண்டிராஜ் இயக்கத்திலும் நடிக்கத் தயாரானார். இதனால் டென்ஷனான "வாலு' தயாரிப்பாளர் "நிக் ஆர்ட்ஸ்' சக்கரவர்த்தி "என் படத்தை முடித்துக் கொடுக்காமல் சிம்பு வேறு படங்களில் நடிக்க அனுமதிக்கக்கூடாது' என கவுன்சிலுக்கு புகார் தட்டிவிட... "வாலு' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி முடிகிற கட்டத்தை எட்டியிருக்கிறது.


அழுகிய முட்டை!

"கோச்சடையான்' தீபிகா தனது இந்திப் படமான "ராம்லீலா' புரமோஷனுக்கு குஜராத் வந்தார். இந்தப் படத்தில் இந்துக்களை புண்படுத்தும் காட்சி இருக்கலாம்... என தகவல்கள் கிளம்பிய நிலையில் தீபிகா மீது அழுகிய முட்டைகளை வீச போராட்டக் காரர்கள் திரண்டு வந்தனர்.

"பிரச்சினைக்குரிய காட்சிகள் படம் வெளியாகும் போது இருக்காது' என தீபிகா உள்ளிட்டவர்கள் கொடுத்த உறுதிமொழியை ஏற்று முட்டை வீசும் மூடை மாற்றிக் கொண்டு கிளம்பினார்களாம் போராட்டக்காரர்கள்.

கிளாமர் தேவை!

"நய்யாண்டி தொப்புள் சர்ச்சை' நஸ்ரியா வுக்கு பதிலடி போல அமலாபாலும், இனியாவும் சில விஷயங்களைப் பேசுகிறார்கள். "கவர்ச்சி விஷயத்தில் நடிகைகள் எந்த உறுதியோடும் இருக்க முடியாது. சூழ்நிலைதான் அதை முடிவு செய்யும். ஒரு நடிகையாக நான் கவர்ச்சியா நடிக்க தயாராவே இருக்கேன்!' என்கிறார் இனியா.

"என்னோட உடலமைப்புக்கு கிளாமர் பொருத்தமா இருக்கும். கதை யோட ஒட்டிய கவர்ச்சி காட்ட தயக்கமில்லை!' என்கிறார் அமலாபால்.

இதுவரை கிளாமர் விஷயத்தில் பிடிவாதமாக இருந்த சமந்தாவும் ரொம்ப சமத்தா ஆந்திராவிலிருந்தபடி அறிக்கை வாசிக்கிறார்.

"பெரிய ஹீரோக்களின் மசாலா படங்களில் கண்டிப்பா கிளாமர் இருக்கும். அதனால் அப்படிப்பட்ட படங்களில் நான் கிளாமரா நடிக்க ரெடியாயிட்டேன்!' என்கிறார். அடுத்து சூர்யா, விஜய் படங்களில் நடிக்கவிருக்கும் சமந்தா, கவர்ச்சி விஷயத்தில் இப்படி க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

""சினிமான்னாலே கிளாமர்தான். சினிமாவில் இருந்துக்கிட்டு கிளாமர் பண்றது தப்பில்லை!'' என நயன்தாரா சொல்லியிருப்பதுதான் நெத்தியடி.

தீபாவளி விருந்து!

ஏ.எம்.ரத்னம் "சூர்யா இண்டர் நேஷனல்' நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்தவர். அவரின் மகன் ரகுராம் "ஸ்ரீசத்ய சாயி' நிறுவனம் மூலம் அஜீத் நடித்திருக்கும் "ஆரம்பம்' படத்தைத் தயாரித் திருக்கிறார்.

இதற்கிடையே ரத்னம் தயாரித்த "கேடி' படத்திற்கு ஃபைனான்ஸ் செய்தவர்கள் மூலம் "ஆரம்பம்' பட ரிலீஸுக்கு எதிராக வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

இதனால் "ஆரம்பம்' வெளியாவதில் சிக்கல் வருமே?... என அஜீத் ரசிகர்களிடம் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.

""இந்தப் படத்தின் தயாரிப்பில் ஃபை னான்ஸ் ரீதியில் பின் னணியில் இருக்கிறது ஆளும் சேனல். அத னால் பட வெளியீட் டில் பிரச்சினை இருக்கப் போவதில் லை...'' என்கிறார்கள் கோலிவுட் ஏரியாவில்.

அதனால் அஜீத்தின் "ஆரம்பம்' கார்த்தியின் "ஆல் இன் ஆல் அழகு ராஜா' விஷாலின் "பாண்டியநாடு' ஆகிய மூன்று படங்களுடன் இந்தி, தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஹிருத்திக் ரோஷனின் "க்ரீஷ் 3' படமும் தீபாவளி சினிமா விருந்தாக வரவிருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் புகுந்து ஹேக்கிங் குழப்படி செய்யும் வில்லன், அதை முறியடிக்கும் ஹீரோ... என ஹைடெக் ஆக்ஷனாக "ஆரம்பம்', காமெடியும், காதலும் கலந்த "அழகுராஜா', ஆக்ஷனும் காமெடியும் கலந்த "பாண்டிய நாடு', குழந்தைகளையும் வசீகரிக்கும் சூப்பர்மேன் பாணி "க்ரீஷ் 3' என நாலும் நாலு விதமான விருந்துதான்.

ad

ad