புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2013

அரசியலில் நுழைவது பணம் சம்பாதிப்பதற்கல்ல: விக்னேஸ்வரன்- துயிலுமில்லங்களில் விரைவில் பூப்போடுவோம்: சிறீதரன் எம்பி- பதவியேற்பு விழாவில் முழக்கம்
அரசியலில் நுழைவது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தா காட்டுவதற்கும் என்றிருந்த காலம் இனி மாற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபையின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாங்கள் போரின் பின்னரான கால கட்டத்தில் இருக்கின்றோம்.  போரினால் மக்கள் சகலதையும் இழந்த ஒரு நிலையில் இருப்பதை நாங்கள் கவனத்தில் எடுக்கின்றோம்.
மனதால் அடிபட்டு, இடி பட்டு தங்களது சுய கௌரவத்தை இழந்த எம் மக்கள் இப்போது தான் எழுந்து நிற்கப் பழகியிருக்கிறார்கள். அவர்கள் கரம் பிடித்து அவர்களை ஜனநாயக வழயில் எடுத்துச் செல்ல எம்மாலான சகலதையும் செய்யவேண்டும்.
எமது சுய நலங்களை அவர்கள் மீது திணித்து அவர்களை மீண்டும் கலவரத்திற்குள் தள்ளக் கூடாது. நாம் வன்முறைக்காலத்தைத் தாண்டி வந்துள்ளோம் என்பதை யாவரும் மறக்க கூடாது என தெரிவித்தார்.
துயிலுமில்லங்களில் விரைவில் பூப்போடுவோம்: பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
இந்தியாவினுடைய முன்னேற்றகரமான சூழலும், அமெரிக்காவின் ஐ.நா அறிக்கையின் வெளிப்பாட்டினாலும் இலங்கை அரசாங்கம் இந்த மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருக்கின்றது. ஆனால் இவற்றுக்குப் பின்னால் சமுதாய போராளிகளுடைய கனவு இருக்கின்றது என்பதை யாவரும் அறிய வேண்டும்.
ஒட்டுமொத்தமாக தமிழீழம் என்ற சொல்லை முதன் முதலில் உச்சரித்த எங்கள் மண்ணின் தந்தை செல்வாவின் சமாதி முன்னே நாங்கள் இன்று பூ போடுவது போன்று, உயிரினும் மேலான அன்புச் செல்வங்களின் மாவீரர் கல்லறைகளில் பூப்போடும் காலம் அண்மித்து விட்டது.
எங்களது வடக்கும் கிழக்கும் இணைந்த தாயக மண்ணில் எங்களுடைய சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, எங்களுடைய தாயகம், எங்களுடைய தேசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டு
எங்களுக்கான ஒரு தீர்வு வழங்கப்படும் வரை நாங்கள் போராடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

ad

ad