சனி, அக்டோபர் 12, 2013

hari_anandasankariஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கனடாவின் ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
எனது முன்னைய அறிவிப்பிற்கு கிடைத்துள்ள அமோக ஆதரவு எனக்கு பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கின்றது.
ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதி மக்களின் பேராதரவை பணிவுடன் ஏற்றுக் கொள்கின்றேன்.
குறிப்பாக இளையோர்களின் ஆதரவு எனக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அனைவரது எதிர்பார்ப்பிற்கேற்பவும் திறம்பட செயலாற்றக் கூடிய , பொறுப்பு மிக்க ஒரு பிரதிநிதித்துவத்தை என்னால வழங்க முடியும்.
ரொறொன்ரோ பல்கலைக்கழகம், சென்றானியல் கல்லூரி , அழகிய ரூஜ் தேசியப் பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கிய ரூஜ் பார்க் தொகுதியில் பல ஆண்டுகள் வாழ்ந்து , பல சேவை அமைப்புக்களுடன் இணைந்து தொண்டாற்றியதுடன் , இத்தொகுதி மக்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயலாற்றக் கிடைத்துள்ள இந்த மிக அரிய சந்தர்ப்பத்தினையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
எதிர்வரும் நாட்களில் இத்தொகுதியில் வாழும் மக்களின் நம்பிக்கையினையும் , நட்பையும் மேலும் பெற்று அவர்களுடன் வேலை செய்வதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
இந்தத் தேர்தல் எங்களது சமூகத்தினதும் , நாட்டினதும் எதிர்காலம் பற்றியது. இது கருத்துக்களைப் பரிமாற்றம் செய்வதற்கு சிறந்த தேர்வாக இருக்கும் எனவும் நம்புகிறேன்.
இவ்வாறு ஹரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.