புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2013

பொதுநலவாய மாநாடு முடியட்டும்; கனடாவிற்கு இலங்கை எச்சரிக்கை 
கனேடிய பிரதமர் மற்றும் வெளிநாட்டமைச்சர் ஆகியோர் அண்மையில் இலங்கை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கனேடிய இராஜதந்திரியை அழைத்து விளக்கம் கோரும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளாது என்று தெரிவிக்கின்றது
.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கனேடிய பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பில் கடந்த வாரத்தில் கனேடிய இராஜதந்திரியை அழைத்து விளக்கம் கோருவது என்றும் கனேடிய உறவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் இலங்கை அரசாங்கம் கருத்துக்களை வெளியிட்டது.

எனினும் அவ்வாறான உடனடி நடவடிக்கை எவையும் எடுக்கப்படவில்லை என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுநலவாயத்தின் ஏனைய நாடுகள், பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தை கொண்டே இந்த தாமதப்போக்கு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=852202360314633119#sthash.nOFkwG0Q.dpuf

ad

ad