புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2013

வாகரை இந்து ஆலயத்தில் இராணுவத்தின் தலையீடு: நிறுத்துமாறுகோரி அரச அதிபருக்கு யோகேஸ்வரன் எம்.பி.மகஜர்
வாகரை ஆலங்குளத்திலுள்ள இந்து ஆலயங்களில் இராணுவம் தலையிடுவதை நிறுத்தி உதவுமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு பிரதேசத்தின் ஆலங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட விநாயகர் ஆலயத்தை புனரமைக்கும் செயற்பாட்டை அதன் அருகில் நாவலடி முச்சந்தி பகுதியில் உள்ள இராணுவத்தினர் தடுத்து வருகின்றனர்.
இவ்வேளை ஒரு சில வாரங்களுக்கு முன் ஆலங்குள கிராமத்துக்கு அண்மித்த குகநேசபுரம் கிராமத்தில் வாழும் மக்களின் வழிபாட்டு தலமாக விளங்கும் பத்திரகாளி அம்மன் ஆலயம் பிரதேச செயலாளரால் காணி வழங்கப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்டது. இதையும் இவ்இராணுவத்தினர் சென்று அபிவிருத்தி செய்ய தடை விதித்துள்ளனர்.
பொதுவாக ஆன்மீக நடவடிக்கை உட்பட சிவில் நிருவாக நடவடிக்கைகளை ஒழுங்காக மக்கள் மேற்கொள்ள முடியாத வகையில் இராணுவ தலையீடு அதிகரித்து வருகின்றது.
எனவே இம்மாவட்டத்தின் அரச அதிபர் என்ற வகையில் ஆலயங்களிலும், ஏனைய சிவில் நிருவாக பகுதியிலும் இவ் இராணுவத்தினர் மேற்கொள்ளும் தலையீட்டை நீக்கி மேற்தரப்பட்ட இரு ஆலயங்களின் புனரமைப்பு செயற்பாட்டுக்கான அனுமதியை வழங்க முன்வருமாறு அன்பாக வேண்டுகின்றேன் என அவ்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்பிரதிகள் வாகரை பிரதேச செயலாளர், வாகரை பிரதேச சபை செயலாளர், ஆலங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ad

ad