புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2013


இலங்கையில் புடைவை வியாபாரம் செய்யும் வர்த்தகரான மொகமட் இம்தியாஸ் என்பவர் சென்னையில் இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை செவன் வோல்ஸில் அமைந்துள்ள அவரது வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு கோடி ரூபாய் கப்பம் கேட்டு இவர் கடத்தப்பட்டுள்ளார்.

வர்த்தகர் கடத்தப்பட்ட பின்னர், அவரது மனைவிக்கு தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு, ஒரு கோடி ரூபாய் பணம் தருமாறும் அவ்வாறு தந்தால் கணவரை விடுதலை செய்வோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, உடனே சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து,சிறிது நேரத்தின் பின்னர் தனது கணவர் தொலைபேசியில் தன்னைத் தொடர்பு கொண்டு தான் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும்,ஒரு வாகனத்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கூறியதாக வர்த்தகரான இம்தியாஸின் மனைவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட வர்த்தகரான இம்தியாஸ் தெரிவிக்கையில்,
சடையப்பா வீதியில் அமைந்துள்ள எனது வீட்டில் தனியாக இருக்கும்போது, நான்கு பேர் வந்து வீட்டுக்கதவை தட்டினார்கள். வியாபரம் சம்பந்தமாக என்னுடன் பேச வேண்டுமென்று அவர்களுடன் வருமாறும் தெரிவித்தனர்.
நான் அவர்களுடன் சென்றபோது வாகனத்தில் மேலும் இரண்டு பேர் இருந்தனர்.
நான் வாகனத்தினுள் உட்கார்ந்தேன் எனக்கு அருகில் உட்கார்ந்து அவர்கள் அனைவரும் என்னைத் தாக்கினார். அதன் பின்னர் வாகனத்தில் வைத்து பல இடங்களில் கொண்டு சென்றனர். அவர்கள் எங்கு கொண்டு சென்றார்கள் என ஞாபகம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் குழுவொன்றை அமைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad