புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2013

 பாலியல் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது ராணுவம்; ஆதாரங்கள் நீதிமன்றில் என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 
"தமிழ் இளைஞர், யுவதிகளை குடும்பப்பெண்களைத் துன்புறுத்தித் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் இராணுவம் எமக்கு வேண்டாம். சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக இருக்க இலங்கை அரசு நினைக்குமானால் இறுதியில் பெரும் விபரீதங்களைத் தான் அது
சந்திக்கும்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
"வடக்கு, கிழக்கில் தமிழ் இளம் யுவதிகளை குடும்பப்பெண்களை இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்துள்ளனர் என்பதற்கு நீதிமன்றில் சான்றுகள் உள்ளன.  
 
இதை இராணுவப் பேச்சாளர் மறுதலிக்க முன்வருவாரா?'' என்றும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. வட மாகாணத்திலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் அதிகாரம் சர்வதேசத்திற்கு இல்லை. எமது நாட்டில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்திருந்தார். மேலும், வடக்கு, கிழக்கில் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் இராணுவம் பொறுப்புக் கூற முடியாது. 
 
எமது கடமை மக்களைப் பாதுகாப்பதே தவிர சீரழிப்பதல்ல எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இராணுவப் பேச்சாளரின் இந்தக் கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் போதே கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
சர்வதேச அமைப்புகளை சர்வதேச நாடுகளை விமர்சிப்பதற்கு இராணுவப் பேச்சாளருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
 
அரசின் அனுமதியுடன் இராணுவத்தின் கொடூரங்கள் வடக்கு, கிழக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து சென்றமையால்தான் இந்த நாட்டின் விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டிவந்துள்ளது. இதை இராணுவப் பேச்சாளர் கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
பதவியில் இருந்து கொண்டு கண்டபடி உளறுவதை அவர் நிறுத்த வேண்டும். வடக்கு மாகாணம் இன்று இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு இராணுவத்தினர் அங்கு தேவையில்லை. 
 
இவர்கள் அங்கு நிற்பதனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. தமிழ் மக்களைத் துன்புறுத்தும் படையாக தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் படையாகவே இந்த இராணுவத்தினர் அங்கு நிலைகொண்டுள்ளனர். போர் நிறைவடைந்தது நான்கு வருடங்கள் நிறைவடைந்த போதும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு அங்கு தொடர்கின்றது.
 
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் மக்களைத் துன்புறுத்தும் ஆக்கிரமிப்புப் படையான இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக உள்ளது.
 
இறுதிப் போரில் இராணுவத்தின் அட்டூழியங்களினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பேரவலங்கள் வார்த்தைகளில் சொல்லமுடியாதவை. இதனால்தான் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் பேராதரவுடன் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=852662379321136652#sthash.z3GtnSjA.dpuf

ad

ad