புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2013

இன்ஸ்பெக்டர் லட்சுமணனை கடவுள் காப்பாற்றியுள்ளார்: 
நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஜெயலலிதா

பா.ஜ., பிரமுகர்கள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் ஆந்திர எல்லை கிராமமான புத்தூரில், ஒரு வீட்டில் பதுங்கியிருந்தனர். அவர்களை கைது செய்ய சிறப்பு படை அமைக்கப்பட்டது. 


இதில், சென்னையைச் சேர்ந்த லட்சுமணன் என்ற இன்ஸ்பெக்டரும் இடம் பெற்றிருந்தார், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தபோது நடந்த தாக்குதலில், லட்சுமணன் படுகாயம் அடைந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரின் தீரத்தை பாராட்டி, 15 லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், பதவி உயர்வும் அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லட்சுமணனை ஜெயலலிதா புதன்கிழமை நேரில் சந்தித்து, உடல் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார்.
லட்சுமணனின் மனைவி மதுபென், தாயார் தனலட்சுமிக்கு ஆறுதல் அளித்தார். அப்போது அவர்களிடம், லட்சுமணனின் வீரத்தை பாராட்டி மக்களின் நன்றியை தெரிவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட ரூபாய் 15 லட்சம் வெகுமதியை அளித்தார். 
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். லட்சுமணனை கடவுள் காப்பாற்றியுள்ளார். எதிர்காலத்தில் காவல்துறைக்கு லட்சுமணன் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன என்று ஜெயலலிதா கூறினார்.
நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஜெயலலிதாவுக்கு, லட்சுமணன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

ad

ad