புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2013

யாழ். பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கொள்ளை

கூரை ஒடுகளைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 150 பவுண் வரையான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அத்துடன் சுவாமிக்கு
சாத்தியிருந்த வெள்ளி அங்கிகளும் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்டுள்ளவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்மீக ரீதியான எந்த அச்சமும் இன்றி திருடர்கள் அரங்கேற்றியுள்ள இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களிடையே அதிருப்தியும் கவலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று புதன்கிழமை நள்ளிரவு மேற்படி ஆலயத்தின் மடப்பள்ளிக் கூரை வழியாக உள்நுழைந்த திருட்டுக் குழுவினர் அந்த அறையின் கதவுகளை உடைத்து ஆலயத்தினுள் நுழைந்துள்ளது. பின்னர் களஞ்சியத்தின் கதவுகளை உடைத்து உட்சென்று அங்கிருந்த குளிர்பானங்களை பருகியதுடன் பிஸ்கட் என்பவற்றையும் உண்டுள்ளனர்.
அந்த அறையிலிருந்த மண்வெட்டி, அலவாங்கு போன்ற ஆயுதங்களை எடுத்துச் சென்று ஆலய மூலஸ்தானத்திற்குச் செல்லும் கதவை உடைத்து எழுந்தருளி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைத்து அதற்குள்ளிருந்த 150 பவுண் வரையான தங்க நகைகளைத் திருடியுள்ளனர்.

ad

ad