புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2013

பிர­பா­கரன் கொல்­லப்­பட்ட போதிலும் வடக்கு அர­சியல் தலை­வர்கள் நாட்டை பிள­வு­ப­டுத்த முயற்சி -இரா­ணுவ வீரர்­களின் சங்கம்

நாட்டில் பிரி­வி­னை­வாத யுத்தம் முடி­வ­டைந்­தும் இலங்கை ஒரே நாடாக உள்­ளதா? என்­பதில் சந்­தே­க­மே நில­வு­கி­ன்றது. பிர­பா­கரன் இறந்த போதிலும் வடக்கின் அர­சியல் தலை­வர்கள்
நாட்டை பிள­வு­ப­டுத்­தவே செயற்­ப­டு­கின்­றனர் என்று இலங்கை இரா­ணுவ வீரர்­களின் சங்கம் குற்றம் சுமத்­தி­யுள்­ளது.
எமது இரா­ணு­வத்­தி­னரின் குறை­பா­டு­களை அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யின்றி சர்­வ­தே­சத்­திடம் முறை­யி­டு­வதும் குற்றச் செய­லா­கவே கருத வேண்டும் எனவும் அந்த சங்கம் தெரி­வித்­தது.
இலங்கை இரா­ணுவ வீரர்கள் சங்­கத்­தினால் கொழும்பு நிப்பொன் ஹோட்­டலில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர்கள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர். இது தொடர்­பாக இலங்கை இரா­ணுவ வீரர்கள் சங்­கத்தின் பிர­தி­நிதி மேஜர் ஜகத் வீர­துங்க தெரி­விக்­கையில்,
முப்­பது வருட கால பிரி­வி­னை­வாத யுத்­தத்­தினை முறி­ய­டித்து விடு­தலைப் புலி­க­ளிடம் இருந்து நாட்­டினைக் காப்­பாற்­றியும் இன்றும் வடக்­கினை பிரிப்­ப­தற்­கான சதிச் செய­லி­லேயே தமிழ் அர­சியல் தலைமைகள் செயற்­பட்டு வரு­கின்­றன.
இனி­யொரு யுத்த சூழல் ஏற்­பட்டால் அதற்கு முகங்­கொடுக்கக் கூடிய நிலைமை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு இல்லை. ஏனெனில் கடந்த 30 வருட கால யுத்­தத்தில் எமது இரா­ணு­வத்­தினர் பலரை நாம் இழந்­து­விட்டோம் மேலும் பலர் யுத்­தத்தில் தமது உடல் அவ­யவங்­களை இழந்து அங்­க­வீ­னர்­க­ளாக வாழ்­கின்­றனர். எனவே, யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை பாது­காத்து சமூ­கத்தில் அவர்­க­ளுக்கான அங்­கீ­கா­ரத்­தினை பெற்றுக் கொடுக்கும் செயற்­பாட்­டையே இன்று நாம் செய்ய வேண்டும்.
மேலும் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இலங்­கைக்­கான விஜ­யத்­தினை மேற்­கொண்­டி­ருந்த போது இலங்­கையின் இரா­ணுவ அமைப்­பு­களின் ஒன்­றான யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட பெண்கள் அமைப்பு மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ரிடம் பல முறைப்­பா­டு­களை செய்­துள்­ளது.
இலங்கை இரா­ணுவ வீரர்­களின் அசெ­ள­க­ரி­யங்கள் தொடர்பில் முதலில் அர­சாங்­கத்­துடன் பேசி தீர்­வொன்­றினை எடுக்க முடியும். எனினும், அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யின்றி இரா­ணு­வத்­தி­னரின் பாதகச் செயற்­பா­டு­களை சர்­வ­தே­சத்திடம் முறை­யி­டு­வ­தா­னது இரா­ணு­வத்­தி­னரின் தியா­கத்­தி­னையும் அர்ப்­ப­ணிப்­பி­னையும் அவ­மா­னப்­படுத்தும் செயற்­பா­டாகும்.
யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட இரா­ணுவ வீரர்­களை இணைத்து அவர்­களின் எதிர்­கால நலன்­க­ளுக்­காக செயற்­ப­டு­வதும் அவர்­களால் செய்­யக்­கூ­டிய வகை­யி­லான தொழிலை வழங்­குதல் மற்றும் நிதி, வாழ்­வா­தார உத­வி­களை வழங்­கு­வதே எமது சங்­கத்தின் நோக்­க­மாகும். இதை மேலும் விஸ்­த­ரித்து நாட­ளா­விய ரீதியில் அந்­தஸ்­தா­ன­தொரு அமைப்­பாக மாற்றும் செயற்­பாட்டில் அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டு வரு­கின்றோம்.
மேலும், தற்­போ­து எமது சங்­கத்தில் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட இராணுவ வீரர்களின் 350 பேர் அங்கத்துவம் வகிக்கின்றனர். இதை மேலும் விஸ்தரித்து மேலும் இராணுவ வீரர்களை இணைத்துச் செயற்படவே நாம் எதிர்பார்க்கின்றோம்.
எனவே, அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இராணுவ வீரர்களுக்கான அந்தஸ்தினை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad