புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2013



             சீமென் கார்டு ஓகியா.. இந்திய கடல் எல்லைக்குள் துப்பாக்கி, தோட்டாக் களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல். மாலுமிகள் 10 பேர் உட்பட 35 பேர் பிடி பட்டிருக்கிறார்கள்.. இந்தக் கப்பலுக்கு கள்ளத்தனமாக டீசல் சப்ளை செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த  5 பேர் கைதாகியிருக்கின்றனர்.

இந்தியக் கடற்படை மற்றும் க்யூ பிராஞ்ச் போலீசாரின் தொடர் நடவடிக் கையால் பரபரத்துக் கிடக் கிறது தூத்துக்குடி. 

எந்த நோக்கத்துடன் இந்தக் கப்பல் பயணித்ததாம்? 

""மாலத்தீவு, கொழும்பு, இந்தியக் கடல் பகுதியிலிருந்து கிளம்பும் வணிகக் கப்பல்கள், கடற்கொள்ளையர்கள் மிகுந்த சோமாலியா வைக் கடப்பதற்கு, பாதுகாப்பாக உடன் செல் லும் அட்வென் போர்ட் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் இது.  இந்தக் கப்பலில் பணியாற்றியவர்களில் அமெரிக்கர் ஒருவர் கூட இல்லை. ஆயுதங்களை வைத்திருக்கும் கப்பல் என்பதால், முறையான அனுமதி பெற்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருவதில் சிக்கல் இருந்திருக்கிறது. அதனாலேயே, அந்த நிறுவனத்தின் துபாய் ஏஜன்ஸி செய்த ஏற்பாட்டின் மூலம், அவசரத் தேவைக்காக,  சட்ட விரோதமாக தூத்துக்குடியில் டீசலை வாங்கியிருக்கிறது. மற்றபடி, அமெரிக் காவின் வெர்ஜீனியாவில் பதிவு செய்யப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் கப்பல் என்பதற்கான ஆவணங்களையெல்லாம் அந்த நிறுவனத்திடமிருந்து பெற்று விட்டோம். யாரையும் டார்ச்சர் பண்ணவில்லை. தொடர் விசாரணை தந்த அழுத்தமோ என்னவோ, அதிலிருந்து விடுபடுவதற்காக தற்கொலைக்கு முயன்றார்கள். இருவரை யும் எச்சரித்து கைது செய்தோம். இப்போது சிறையில் இருக்கிறார்கள்''’’ என்கிறது க்யூ பிராஞ்ச் வட்டாரம். 



கப்பல் பணிக்காக நீண்ட நாட்கள் குடும்பத்தைப் பிரிந்திருந்த நிலையில், சிறைவாசத்தை வேறு அனுபவிக்க நேரிட்டதால், துயரம் தாங்காமல் பாளையங்கோட்டை சிறையில்  தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார் தலைமைப் பொறியாளர் ஷிடரென்கோ வாலோரி!

மத்திய புலனாய்வுப் பிரிவோ அமெரிக்க கப்பல் விவகாரத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கிறது. "ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப் பதிவு முடக்கப்பட்டு குழப்பம் நிலவி வரும் மாலத்தீவு பகுதியிலி ருந்துதான் இந்தக் கப்பல் வந்திருக் கிறது. மாலத்தீவில் ஜனநாயகத் துக்கு எதிராக போலீஸ், ராணுவம், சுப்ரீம் கோர்ட் என அனைத்து அரசு இயந்திரங்களும் செயல் படுகின்றன. இன் னொரு பர்மா உருவாகும்...'’என்று மாலத்தீவின் செய்தித் தொடர்பாளர் அபுதுல் கபூர் கூறியிருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.’’ என்கிறது. 

பா.ஜ.க.வும் இது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது. “""2011-ல் நடைபெற்ற மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம் என்பதை நாடு உணர்ந்திருக்கிறது. ஆனால், சட்ட விரோதமாக ஒரு வெளிநாட்டுக் கப்பல், கொச்சி துறைமுகம் வழியாக நாட்டின் பிற கடல் பகுதிகளுக்குச் செல்ல முடியும் என்பது நமது பாதுகாப்பு வலுவாக இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'' என்கிறார் பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன். 

இது மத்திய அரசின் வெறும் கண் துடைப்பு நடவடிக்கையே'’என்று முடிச்சு போடவும் செய்கிறார்கள் இங்குள்ள காவிக் கட்சியினர். 

""கப்பலுக்கு 1500 லிட்டர் டீசல் போட்டத விடுங்க. இதை இங்கே, எக்ஸ்போர்ட்ல நம்பர் ஒன்னா இருக்கிற ஒரு  குரூப் எப்பவும் செஞ்சிக்கிட்டுத்தான் இருக்கு'' மொத்தத்துல... தூத்துக்குடியை கடத்தல் நகரமா உருவாக்கிட்டு வர்றாங்க''’என்று ஆவேசத்துடன் சொல்கிறார் உள்ளூர்வாசியான மரிய சூசை. 

""தென் கொரியாவுல இருந்து மது பாட்டில்கள் கடத்திட்டு வர்றாங்க.. சிங்கப்பூர்ல இருந்து பிஸ்கெட்டுங்கிற பேருல சிகரெட் பாக்கெட்டுகளை கடத்திட்டு வர்றாங்க. சிறீலங்காவுல இருந்து தங்கக் கட்டி கடத்திட்டு வர்றாங்க. இங்கேயிருந்து சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு செந்தூரக் கட்டைகளைக் கடத்துறாங்க. அட, கஞ்சா... ஹெராயின் கடத்தலும் கூட நடக்கத்தான் செய்யுது. ரேசன் அரிசியும் போகுது. இது எல்லாமே லட்சம், லட்சமா, கோடி... கோடியா கொட்டுற பிசினஸ். இந்த விவகாரத்துல கொலையெல்லாம் கூட நடந்திருக்கு. சுப்ரீம்கோர்ட் உத்தரவு இருக்கு. தமிழக அரசும் தடை விதிச்சிருச்சு. ஆனாலும், தாது மணல் எக்ஸ்போர்ட் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு. இந்தியாவுல கொட்டுறதுக்காக, வெளி நாட்டுல இருந்து எலக்ட்ரானிக்ஸ் கழிவு, மருத்துவக் கழிவெல்லாம் இந்தத் துறைமுகத்துக்கு வரத்தானே செய்யுது. தூத்துக்குடி கஸ்டம்ஸ் அந்த அளவுக்கு வீக்கா இருக்கு''’என்கிறார் சூசை.  

"இந்தியக் கடலோர காவற்படையும் ஸ்ட்ராங்கா இல்லை'’எனச் சொல்லும் முகிலன் ’""இப்படித்தான் சிங்கப்பூர் கப்பல் ஒண்ணு கூடன்குளம் அணு உலையிலிருந்து 2.5 கி.மீ தூரத்துல ரெண்டுநாளா நின்னுச்சு. மீனவர்கள் இந்த தகவலைச் சொன்னாங்க. உளவுத்துறையினர் அந்தக் கப்பல்ல போயி விசாரிச்சாங்க. அப்புறம்தான் தெரிஞ் சது அது சரக்கு கப்பல்ன்னு.  மோச மான வானிலை காரணமா நிக்குதுன்னு. இப்ப அமெரிக்க கப்பல் ஆயுதங்களோடு இந்தியக் கடல் எல்லைக்குள் ளேயே சட்ட மீறலா வந்து டீசல் நிரப்பியிருக்கு. நம்ம கடலோர காவல் படை மட்டும்  உஷார் நிலையில் இருந் திருந்தால்... தமிழக மீனவர்கள் இத் தனை பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டிருப்பார்களா? அத னால்தான் சொல்கிறோம். பாதுகாப்பே இல்லாத சூழ்நிலையில் கூடன்குளம் அணு உலை இயங்கவே கூடாதென்று. நிஜத்தைச் சொல்லணும்னா...  அன்னிய நாட்டுக் கப்பல் எளிதில் ஊடுருவக் கூடிய திறந்த மடமாகத்தான் இருக்கிறது இந்தியக் கடல் வெளி''’என்கிறார் ஆதங்கத்துடன். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம், இலங்கையின் துவேசம் என இத்தனை இடர்பாடுகளுக்கிடை யில் உரிய பாதுகாப்பும் இல்லாத தேசத்திலா நாம் வாழ்கிறோம்?

ad

ad