புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2013

பேரெழுச்சியுடன் திரண்ட கனடியத் தமிழர்கள்: வரலாறாக படையெடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

கனடா அரசு கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டை புறக்கணித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஒட்டாவா நாடாளுமன்ற முன்றலில் கனடியத் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் குளிரையும் பொருட்படுத்தாது இன்று பேரெழுச்சியுடன் அணிதிரண்டனர்.
கனடிய அரசிற்கும், குறிப்பாக கனடியப் பிரதமர் ஸ்ரீபன் காப்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள், கனடிய ஊடகங்கள், தமது சக கனடிய மக்கள் அனைவருக்கும் முகமாக இப்பேரெழுச்சி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வரலாறாய் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர் என அறியத் தருகின்றார் எமது செய்தியாளர்.
வழமைக்கு மாறாக மந்திரிகள் அதுவும் மூத்த மந்திரிகள் பெருமளவில் கலந்து கொண்டமை கலந்து கொண்ட மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது. பலரும் இது கனவா அல்லது நனவா என தமக்குள்ளேயே கேட்டுக் கொண்டமை பெரிதும் அவதானிக்கக் கூடியதாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வு ஆரம்பித்த நண்பகல் 12 மணிக்கே முதலாவது நபராக கலந்து கொண்டார் மூத்த அமைச்சர் பீற்றர் மக்கே அவர்கள். நீதித்துறை அமைச்சரான அவரின் வருகையை தொடர்ந்து முக்கிய அமைச்சர்களான வேலைவாய்ப்பு அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் கிரிஸ் அலெக்ஸ்டாண்டர் அவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் பால் கோசல் அவர்கள், பல்கலாசார அமைச்சர் ரிம் உப்பல் அவர்கள் எனக் கலந்து கொண்டு கனடிய அரசின் இலங்கை குறித்த கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
கனடியப் பிரதமர் கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டை இலங்கையில் இடம்பெறுவதை வெளிப்படையாகவே புறக்கணித்ததைத் தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட் அவர்களும் செல்லாது தவிர்த்ததைத் அடுத்து, மாநாட்டுக்குச் செல்லும் துணை அமைச்சர் டிபக் ஒப்ரோய் அவர்களும் கலந்து கொண்டு பேசுகையில், இலங்கைக்கு கனடாவின் கடுமையான செய்தியையே தாமும் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.
இவர்களுடன் ஆளும் கன்சவேட்டிவ் கட்சியை சேர்ந்த பாராளுமனற் உறுப்பினர்கள் கனடா தழுவி கலந்து கொண்டு உரையாற்றியது மட்டுமன்றி, ஈழத்தமிழர்களின் நிலை குறித்த தமது புரிதலையும் அவர்களுக்கான தமது அன்பையும் இலங்கையில் மனித உரிமைகள் நிலை குறித்த தமது விசனத்தையும் வெளிப்படுத்தினர்.
அந்த வகையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஸ்டீவன் வூட்வெர்த் (Steven Woodworth) -  Kitchener Centre, பற்றிக் பிறவுன் (Patrick Brown) - Barrie, மார்க் அட்லர் (Mark Adler )- York Centre, Wladyslaw Lizon - Mississauga East—Cooksville, பிறட் புட் (Brad Butt) - Mississauga—Streetsville, போல் கலென்ரா (Paul Calendra)  - Markham Stoffville,ஹரொல்ட் அல்பிரெச்ட் ( Harold Albrecht) - Kitchmer Contstoga, பார்ம் ஹில் (Parm Gill )- Brampton—Springdale, ஸ்ரெல்லா அம்லெர் (Stella Ambler) - Mississauga South, டெவின்டெர் சௌரி (Devinder Shory) -  Calgary Northeast, புரூஸ் ஸ்டன்டென் (Bruce Stanton) - Simcoe North, ஜோன் கெர்மிச்செல் (John Carmichael) - Don Valley West, Corneliu Chisu  - Pickering—Scarborough East, Costas Menegakis - Richmond Hill, ரோபேர்ட் சோபுக் (Robert Sopuck) - Dauphin—Swan River—Marquette, டேவிட் அன்டசன் (David Anderson) - Cypress Hills—Grasslands ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சியான புதிய சனநாயக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தோமஸ் மக்கிலெயர் அவர்கள் வெறொரு மாநிலத்தில் இருந்த காரணத்தால் தனது வாழ்த்துச் செய்திகளை அனுப்பிய அதேவேளை தனது கட்சிப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து கொள்வதையும் உறுதிப்படுத்தியிருந்தார்.
அந்த வகையில் தமிழ் மக்கள் மனங்களில் என்றும் பதிந்திருக்கும் முன்னாள் தலைவர் ஐக் லேட்டன் அவர்களின் துணைவியார் ஒலிவியா சோ அவர்கள் கலந்து கொண்டு தமிழ் மக்கள் குறித்த தனது குடும்பத்தின் அன்பை நீண்ட பேச்சொன்றினூடாக வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே சிறப்பாக அவர் ரொரன்ரோவில் இருந்து வருகை தந்ததாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நேரு கணரத்தினம் தெரிவித்த போது மக்கள் பெரும் ஆரவாரம் செய்தனர்.
அதேவேளை பல புதிய சனநாயக்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டு உரையாற்றினர்.
அந்த வரிசையில் ஒரே ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் (Rathika Sitsabesan) - Scarborough௰Rouge River, பேக்கி நாஷ் (Peggy Nash)- Parkdale High Park, போல் டெவர் (Paul Dewar) -  Ottawa Centre, மைக் சுலிவன் Mike Sullivan - York South௰Weston, ஐரீன் மதிசென் (Irene Mathyssen) -  London௰Fanshawe , ஜின்னி ஜோகின்ரா சிம்ஸ்(Jinny Jogindera Sims) - Newton௰North Delta , Murray Rankin - Victoria , Linda  Duncun - Edmonton௰Strathcona , Dan Harris - Scarborough Southwest, Marc - Antre Morin - Laurentides௰Labelle  ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டனர்.
மூன்றாவது கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் ஐஸ்ரின் ரூடோ அவர்களும் நகரில் இல்லாத காரணத்தால் தனது செய்தியை அனுப்பி வைத்திருந்தார். அவரது கடசியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவையும் வெளிப்படுத்தினர்.
கலந்து கொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ்டி டங்கன் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பேரவலத்தை பற்றி பேசும் போது கண்ணீர் விட்டழுதது மட்டுமன்றி செயலற்றிந்த தமது நிலைக்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
லிபரல் கட்சி சார்பில் ஜோன் மக்கொலும் (John McCollum) - Markham௰Unionville,  ஜுடி க்ரோ (Judy Sgro) - York West , மார்க் கார்னியூ (Marc Garneau) -  Westmount Ville-Marie, கிறிஸ்டி டன்சுன் (Kristy Duncun) - Etobicoke North ஆகியோர் உரையாற்றினர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ்ச் சிறார்கள் மலர் மற்றும் நன்றி அட்டைகளை வழங்கி வரவேற்றனர். அதேவேளை பல்வேறு பாராளுமன்ற பணிகள் நிமித்தமாக நேரடியாக கலந்து கொள்ளமுடியாக 25 பேருக்கும் மேற்ப்பட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களின் செய்திகளும் நேரு குணரத்தினத்தால் மக்களுக்கு வாசிக்கப்பட்டது.
அவர்களில் இரு செனட்டர்கள், மற்றும் அமைச்சர்களும் அடங்குவர். பின்னர் எமது செய்தியாளரிடம் பேசிய அவர் மூன்று பிரதான கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கனடாவின் 10 மாநிலங்களில் 8 மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டதாக தெரிவித்தார். சிலர் சொல்வது போல அது வாக்குக்காக அல்ல என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர் என்றார். ஆம் கலந்து கொண்ட பலரின் தொகுதிகளில் தமிழர்களே இல்லை என்பது இங்கு பெரிதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே எட்டு மாநிலங்களில் இருந்து நேரடியாகவும், வாழ்த்து செய்திகளினூடாகவும் 60க்கு மேற்ப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டமை ஒரு பெரும் வரலாறு என்றனர் கலந்து கொண்ட தமிழ் மக்கள்.
அதாவது கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 சதவீதமானோர் கலந்து கொண்டுள்ளனர். "என்னுடைய எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் இன்றைய நிகழ்வு தகர்தெறிந்துவிட்டது. பெரிய நம்பிக்கை ஒன்று இப்போது ஏற்படுகிறது. முதற் தடவையாக முழுமையான திருப்தியுடன் ஒட்டாவா வந்து திரும்பிச் செல்கிறேன்" என நிகழ்வில் கலந்து கொண்ட நபரொருவர் தெரிவித்துள்ளார்.

ad

ad