சனி, அக்டோபர் 12, 2013

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய கணணி வலைப்பின்னல் ஊடறுக்கப்பட்டது! சிங்களத்தின் சதி நடவடிக்கையா?
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய கணணி வலையம் விசமிகளால் ஊடறுக்கப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை இந்த ஊடறுப்பு இடம்பெற்றுள்ளது.
இவ்விவகாரம் உடனடியாகவே இனங்காணப்பட்ட நிலையில், தொழில்நுட்ப பாதுகாப்பு பொறிமுறைகள் வழியே மீள்சீரமைக்கப்பட்டதோடு ஆவணங்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மின்னஞ்சல் பரிவர்த்தனை பொறிமுறை மீதும் ஊடறுப்பு மேற்கொள்ளப்பட்டமை இனங்காணப்பட்டிருந்தது.
இதேவேளை ஊடகத்துறை அமைச்சர் சுதன்ராஜ் அவாகளது தனிப்பட்ட மின்னஞ்சல் மீதும் சீனாவில் இருந்து தொடர்சியான ஊடறுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக கூகுள் நிறுவனம் தெரியப்பட்டிருந்தியிருந்தது.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய கணணி வலையம் விசமிகாளால் ஊடறுக்கப்பட்டிருந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை செயற்பாட்டினை முடக்குவதற்கான சிங்களத்தின் சதிவேலைகளில் ஒன்றாக இவைவகளும் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.