புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013

w1








இலங்கைக்கு எதிராக லண்டனில் மீண்டும் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டம் 

இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டினை அங்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச மட்டத்தில் போராட்டங்கள் வலு பெற்றிருக்கும் நிலையில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வரும் பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு பாரிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை இன்று காலை 10 மணி முதல் மதியம் 13.00வரை லண்டனில் நடத்தி உள்ளனர்.
இவ்வார்ப்பாட்டமானது Pall Mall Marlborough House இல் அமைந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.இதனை பிரித்தானிய தமிழ் மக்கள் சார்பாக பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் மற்றும் இளவரசர் சார்ள்ஸ் அவர்கள் ஏற்கனவே இலங்கை வந்தடைந்திருக்கும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோஷங்க‌ளை எழுப்பியவாறு பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த மக்கள் உணர்வெழுச்சியுடன் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலித்ததை காணக்கூடியதாக இருந்தது.
ஏற்கனவே கடந்த காலங்களில் இருந்தே இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வரும் பிரித்தானிய தமிழர் பேரவை இலங்கை அரசு இந்த மாநாட்டின் மூலம் தமது கரங்களில் உள்ள இரத்தக் கறையை பூசி மொழுகத் திட்டம் போட்டு செயல்ப்படுகின்றது.
ஆனால் அதே மாநாட்டினை பயன்படுத்தி நாம் இலங்கையின் உண்மையான முகத்தினை உலகுக்கு வெளிப்படுத்த இவ்வாறான போராட்டங்கள் ஒரு உந்துசக்தியாக இருக்க வேண்டும் என அறைகூவல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை பிரித்தானியா பூராகவும் உள்ள பாராளுமன்ற‌ உறுப்பினர்களை சந்தித்து இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கேட்டுக் குரல் எழுப்புமாறும் வேண்டுகோள் விடுத்ததுடன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இழைக்கப்படுகின்ற அநீதிகளை வெளிக்கொன்டு வருவதில் பிரித்தானிய தமிழர் பேரவை கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவது இங்கு சுட்டிகாட்டத்தக்க விடயமாகும்.
w2
w3

ad

ad