புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2013

வவுனியா அட்டமஸ்கட மதகுருவுக்கு எதிராக 12 வயது சிறுவன் ஒருவன் இன்றும்(26) நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Vasamalar2
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாக சிறுவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து அதன் முகாமையாளரான விகாராதிபதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் 12 வயது சிறுவன் ஒருவன் தனக்கம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் தான் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாகவும் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளான். நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து வவுனியா பொலிசிலும் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவிக்கையில்,
நான் குடும்பநிலை காரணமாக அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் மூன்று வருடங்களாக தங்கி இருந்தேன். நான் விளையாடிக் கொண்டிருந்த போது பழைய ஆணி இருந்த கட்டை ஒன்றினால் எனக்கு அடித்தமையால் காலில் காயம் ஏற்பட்டது. காலுக்கு மருந்து கட்டாமல் பென்ரச் போட்டார்கள். அதன்பின் என் கால், கை எல்லாம் புண் வந்துவிட்டது. இப்பொழுதும் அது மாறவில்லை. எனக்கு தலையிலும் அடித்து பெரிய காயம் எற்பட்டது. தேங்காய் பால் குடிக்க தந்தார்கள். அதன் பின் அது மாறிவிட்டது. என்னைப் போல என்னுடைய அண்ணாவுக்கும் அடிப்பார்கள். அவருக்கும் காயங்கள் இருக்கு. எங்கள் இல்லத்தில் இருக்கும் இருண்டு பேர் என்னை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்துவார்கள். இதே மாதிரி மற்றவர்களும் செய்யுறவர்கள் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பில் சிறுவனின் உறவினர் கருத்துத் தெரிவிக்கையில், இவன் பல விடயங்களை சொல்லுறான் இல்லை. இவனுக்கு அங்கு கண கொடுமை நடந்திருக்கு. ஆணி இருந்த கட்டையால அடிச்சதில் இருந்து இவன்ர உடம்பில ஒரே புண்வருது. சரியான முறையில் மருந்து கட்டல. கறல்கட்டிய ஆணி என்றதால் இவனுக்கு ஏலாம இருக்கு. இது சம்மந்தமாக முறைப்பாடு செய்ய வேண்டாம் என தொலைபேசியில் மதகுரு மிரட்டியுள்ளார் எனவும் தெரிவித்தார்.
சிறுவன் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ்.றுவான் தெரிவிக்கையில், சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் குறித்த சிறுவன் உறவினருடன் வந்து முறைப்பாடு செய்துள்ளதாகவும் தற்போது வவுனியா பொலிசில் முறைப்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Vasamalar1

ad

ad