புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2013

23வது பொதுநலவாய மாநாடு அங்குரார்ப்பணம்!: நாட்டின் மனித உரிமையுடன் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: ஜனாதிபதி
பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் 23வது மாநாட்டை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
கொழும்பில் உள்ள தாமரை தடாகம் அரங்கில் இதற்கான நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வருகிறது.

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டின் மனித உரிமையுடன் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: ஜனாதிபதி
நாட்டில் 30 வருடங்களாக நிலவிய யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. மனித உரிமையின் முக்கிய அம்சமான வாழும் உரிமை இலங்கை அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தாமரைத் தடாகத்தில்  மண்டபத்தில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
'பொதுநலவாய மாநாட்டை தீர்ப்பு வழங்கும் அல்லது தண்டனை வழங்கும் அமைப்பாக பயன்படுத்தாது மக்களின் நலன்புரி மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
'அனைத்து மதங்களையும் இலங்கை மதிக்கின்றது. ஏனையோர் செய்யாதவை தொடர்பில் தேடுவதை விடுத்து செய்தவை தொடர்பில் தேடிப் பார்ப்பதே எமது கடமையாக வேண்டும்' என பௌத்த தர்ம போதனையிலுள்ள வசனமொன்றை எடுத்துரைத்து ஜனாதிபதி தனது உரையை முடித்துக்கொண்டார்.

ad

ad