புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2013

கால்பந்து: ரொனால்டோ சாதனை
போர்த்துகலைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 23ஆவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.

ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக ரொனால்டோ விளை யாடி வருகிறார். லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் சோசிடட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ரொனால்டோ (12, 26, 76 ஆகிய நிமிடங்களில்) ஹாட்ரிக் கோல் அடித் தார். இதன்மூலம், கால் பந்து வரலாற்றில் அவர் அடித்த ஹாட்ரிக் கோல் களின் எண்ணிக்கை 23-க உயர்ந்தது.
28 வயது நிரம்பிய ரொனால்டோ, இந்த சீசனில் 19 போட்டி களில் விளையாடி 27 கோல்களை அடித்து உள்ளார். இதில், 4 ஹாட்ரிக் கோல்களும் அடங்கும்.
வரும் 15ஆம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் போர்ச் சுகல் அணியும், சுவீடன் அணியும் மோதுகின்றன.
ரொனால்டோ சிறப் பான ஃபார்மில் உள்ள தால், போர்ச்சுகல் அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ஆனால், சுவீடன் வீரர் இப்ராஹிமோவிச், ரொனால்டோவுக்கு கடும் சவால் அளிக்கக் காத்துள்ளார். சாம்பி யன்ஸ் லீக் போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜெர் மெய்ன் அணிக்காக விளை யாடி வரும் இப்ராஹி மோவிச்சும் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad