புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2013


            25-ந் தேதி காலை 10 மணியை நெருங்கும்போது திண்டுக்கல் கோர்ட் முன்பு உ.பி.க்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியது. "குற்றவாளியாக நீதிமன்றம் வருகைதரும் ஸ்டாலினை வன்மையாகக் கண்டிக்கி றோம்'’என பெரிய சைஸில் விளம்பரப் பலகையை
வைத்திருந்தனர் ஆளும் தரப்பு. அந்த விளம்பர போர்டுக்கு பாதுகாப்பாக போலீஸ் டீம்  நின்றிருந்தது. இதனால் உ.பி.க்கள், ர.ர.க்கள் வைத்த அந்த போர்டை மறைக்கும்படி, "வழக்கை சந்திக்கவரும் கிழக்கே வருக'’என்ற பெரிய பேனரைக் கொண்டுவந்து, உயர்த்திப் பிடித்தபடி நின்றனர். 

சரியாக காலை 10.45-க்கு கோர்ட்டுக்கு வந்த ஸ்டாலினைப் பார்த்து "அடுத்த வாய்தா ஜனவரி 6-ந் தேதி. இதில் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை'’என்றார் மாவட்ட மாஜிஸ்திரேட் பாலச்சந்திரகுமார். காத்திருந்த பத்திரிகையாளர் களிடம் "ஜெயலலிதா தன் மீதான வழக்குகளை வாய்தா வாங்கியே இழுத்தடிக்கிறவர். அந்த நீதிபதி விசாரிக்க வேண்டும். இவர் விசாரிக்கூடாது என்றெல்லாம் குறுக்கிடுகிறவர். நாங்கள் நீதித்துறையை மதிக்கிறவர்கள்'’என்றார் புன்னகையோடு. 

அவர் சென்றதும், திரண்டிருந்த உ.பி.க்கள் ஸ்டாலினை விமர்சித்து வைத்திருந்த பேனர்கள் மீது கற்களையும் செருப்பு களையும் வீசினர். காக்கிகள், உ.பி.க்கள் மீது தாக்குதலைத் தொடங்கினர். 

மாஜி அமைச்சரும் தி.மு.க. மா.செ.வுமான ஐ.பெரியசாமி நம்மிடம், ""தி.மு.க.வின் பேனரை அ.தி.மு.க.வினர் கிழித்தபோது கைகட்டி வேடிக்கை பார்த்த போலீஸ், இப்போது தி.மு.க.வினர் மீது கடுமையாகத் தடியடிப் பிரயோகத்தை நடத்தியிருக்கிறது'' என்றார் காட்டமாய்.

அ.தி.மு.க. ந.செ. பாரதிமுருகனோ ""ஏற்காடு தேர்தல் பணியில் இருந்தேன். அப்போது எங்கள் பேனரை தி.மு.க.வினர் கிழிப்பதாகத் தகவல் வந்தது. அமைச்சர் நத்தம் விசுவ நாதன்  என்னைக் கூப்பிட்டு, "உடனே திண்டுக்கல் போய். அங்கே மீண்டும் பேனரை வை' என்றார். அதன்படி நாங்கள் போனபோது பிரச்சினை வெடித்துவிட்டது. அதற்கு பதிலடியாக இப்போது எங்கள் பேனரை தி.மு.கவினர் கிழித்தது சரியா?''’என்றார் கூலாய்.

காவல் துறையினரோ "எங் கள் மீதே கற்களையும் செருப்பை யும் வீசினர். எங்களைக் காப் பாற்றிக்கொள்ளத்தான் தடியடி நடத்தவேண்டி வந்தது' என்கி றார்கள். 

கோர்ட்டுக்கு வந்தாலும் பிரச்சினை, வராவிட்டாலும் பிரச்சினை.           

ad

ad