புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2013

டேவிஸ் கோப்பை: செக் குடியரசு அணி மீண்டும் சாம்பியன்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் செக் குடி யரசு அணி 3-2 என்ற புள் ளிக் கணக்கில் செர்பி யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது.

செர்பியாவில் உள்ள பெல்கிரேடு நகரில் இத் தொடரின் இறுதிச்சுற்று நடந்தது. இதில், செர்பி யாவும், நடப்பு சாம்பி யனான செக் குடியரசும் மோதின.
டேவிஸ் கோப்பை தொடரில் விளையாடும் அணிகள் எதிரணியுடன் 3 ஒற்றையர் மற்றும் 2 இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் மோதும்.
வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தின் முடி வில் 1-1 என இரு அணிக ளும் சமநிலை பெற்றன. சனிக்கிழமை நடந்த இரட் டையர் பிரிவு ஆட்டத்தில் செக் குடியரசின் பெர்டிச் மற்றும் ஸ்டீபானெக் இணை வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என புள் ளியில் முன்னிலை பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒற்றையர் பிரிவில், தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஜோகோ விச், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் மோதி னர். இதில் 6-4, 7-6, 6-2 என்ற நேர் செட் கணக் கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற புள்ளிக் கணக்கில் சம நிலை பெற்றது.
கடைசி ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் ரடெக் ஸ்டீபானெக், செர் பியாவின் துஸன் லாஜோ விச்சுடன் மோதினார். இதில், 6-3, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஸ்டீ பானெக் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் செக் குடியரசு 3-2 என முன் னிலை பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.

ad

ad