புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2013

திட்­ட­மிட்ட வகையில் தென்­ப­கு­தி­யி­னரை வடக்கில் குடி­ய­மர்த்­து­வ­தற்­காக முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஒட்­டு­சுட்டான் பிர­தேச செயலர் பிரிவில் ஒதி­ய­மலைப் பகு­தி­யி­லுள்ள மக்­களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அப­க­ரிக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­கரன் குற்றம் சாட்­டி­யுள்ளார்.
 
சம்­பவ இடத்­திற்கு நேர­டி­யாகச் சென்ற அவர் நிலை­மை­க­ளையும் அவ­தா­னித்­துள்ளார். இது தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,
ஒட்­டு­சுட்டான் பிர­தேச செயலர் பிரிவில் ஒதி­ய­மலைப் பகு­தியில் செம்­பி­யன்­குளம், கரு­வேப்­ப­மு­றிப்­புக்­குளம் ஆகிய பிர­தே­சங்­களை அண்­டிய வயல் நிலங்­களும் மேட்­டுக்­கா­ணி­யுடன் தோட்டப் பயிர்ச் செய்கை நிலங்­களும் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஒதி­ய­மலை கிரா­மத்தில் திட்­ட­மிட்ட வகையில் தென்­ப­கு­தி­யி­னரைக் குடி­யேற்­று­வதை நாம் பல்­வேறு தடை­க­ளுக்கு மத்­தியில் நேரில் சென்று பார்­வை­யிட்­டுள்ளோம்.
 
அப்­ப­கு­தியில் வாழ்ந்த எமது தமிழ் மக்­களின் குடி­யி­ருப்பு வீடுகள் அத்­தி­பா­ரத்­துடன் குழி­தோண்டி எடுக்­கப்­பட்­டுள்­ளது. எமது மக்கள் அங்கு வாழ்ந்­த­தற்­கான சான்­று­க­ளாக கற் கிண­று­க­ளையும் மரத்­தோப்­புக்­க­ளையும் மட்­டுமே நாம் தற்­பொ­ழுது காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. மேலும் அப்­ப­கு­தியில் பழைய பாதை அகற்­றப்­பட்டு தென் பகு­தி­யி­ன­ருக்குக் குடி­யேற்­று­வ­தற்கு வச­தி­யாக குடி­யேற்றக் காணி­க­ளுக்கு இடையே ஒரு பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­கு­தியில் அதி­க­மான எல்லைக் கட்­டை­களும் நாட்­டப்­பட்­டுள்­ளன. இதே­போல்­அப்­ப­கு­தியில் காடுகள் பெரு­ம­ளவில் அழிக்­கப்­பட்டு புதிய சிங்­களக் குடி­யேற்றம் துரி­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தையும் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.
 
ஒதி­ய­மலை கிராம அலு­வலர் பிரி­வுக்­குட்­பட்ட , பழைய கொம்­பனித் தெரு என்ற பகு­தி­நோக்கி செல்­லும்­போது வெலி ஓயா பகு­திக்குள் இடம்­பெறும் சிங்­க­ளக்­குடி திணிப்­புக்கள் போன்று குடி­யேற்­றங்கள் துரி­த­க­தியில் நடை­பெ­று­வ­தைக்­கண்டு அதிர்ச்­சி­யுற்றேன்.அங்கு புதி­தாக பாட­சா­லைகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. புல்­டோசர் மூலம் புதிய பாதைகள் அமைக்­கப்­படும் பணி இடம்­பெ­று­வதை நேரில் கண்டேன். தமிழ்ப்­பெ­யர்கள் மாற்­றப்­பட்டு புதி­தாக சிங்­கள பெயர்ப்­ப­ல­கைகள் வைக்­கப்­பட்­டுள்­ளன .
புதிய வீடுகள் கட்­டப்­ப­டு­வ­தற்­கான அடிக்­கல்­களும் நாட்­டப்­பட்­டுள்­ளன. அது­மட்­டு­மின்றி அப்­ப­கு­தி­க­ளுக்கு மின்­சார வச­தியும் பூர­ண­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது. முதலில் தமி­ழர்கள் பயன்­ப­டுத்­திய சிலோன் தியேட்டர்ஸ் பகு­தியில் தற்­போது சிங்­கள மக்கள் பயன்­ப­டுத்­து­வ­தையும் நேரில் அவ­தா­னித்தேன். ஒதி­ய­மலை வாசி­க­சா­லை­யி­லுள்ள எங்கள் மக்­க­ளிடம் அங்கு இடம்­பெறும் நில, வள அப­க­ரிப்­புக்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினேன்.
 
பின்னர் ஒதி­ய­ம­லைப்­ப­டு­கொலை இடம்­பெற்ற பகு­திக்கு சென்­ற­போது அச்­சம்­பவம் தொடர்பில் மக்கள் என்­னிடம் வேத­னை­யுடன் விப­ரித்­தனர். அக்­கட்­டடத்­தி­னுள்ளே 28 தமிழ்­மக்கள் சுட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தையும் மேலும் 5 பேர் அரு­கி­லி­ருந்த காட்­டுப்­ப­கு­தியில் டிராக்டர் வண்­டி­யுடன் சேர்த்து எரிக்­கப்­பட்­ட­தையும் அவர்­களின் நினைவு நாளையே அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே நினைவு கூர்­வ­தா­கவும் கூறினர். இம்­முறை அந்த நினைவு நாளில் நீங்கள் அவர்­களை நினைவு கூர துணை­யி­ருப்போம் என்றோம்.
 
அதன் பின்னர் ஒதி­ய­மலை பிள்­ளையார் கோயி­லுக்கு வந்து பூஜை­களில் கலந்து கொண்­ட­போது 89 வய­து­டைய நாக­மணி சின்­னத்­தம்­பி­யிடம் சில தர­வு­களை சேக­ரிக்க முடிந்­தது. அங்கு அவர் சுமார் 4 தலை­மு­றைக்கு மேல் வாழ்ந்து வரு­வ­ தா­கவும் ஒதி­ய­மலை தமி­ழரின் பூர்­வி­கக்­கி­ராமம் எனவும் , டொலர் பாம், கென்பாம் ஆகிய பகு­தி­க­ளுக்கு அண்­மித்த நவா­லயம், சிவா­லயம் உள்­ளிட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலம் தமி­ழ­ருக்­கு­ரி­யவை என்றும், தற்­போது பிள்­ளையார் கோயி­லுக்கு அருகில் வரை சிங்­களக் குடி இருப்­புக்கள் வந்­து­விட்­டன என்று வேத­னை­யுடன் விப­ரித்தார்.
 
ஒட்­டு­மொத்­த­மாக மக்­க­ளிடம் தரவுகளை சேக­ரித்த, நான் நேரில் கண்டு கொண்ட தர­வு­க­ளின்­படி இடப்­பெ­யர்­வுக்கு முன் எங்கள் மக்­களின் பாவ­னை­யி­லி­ருந்த சுமார் 700 ஏக்கர் நிலப்­ப­கு­தியும் காடு­க­ளாக இருந்த சுமார் 2 ஆயி­ரத்து 500 ஏக்கர் நிலப்­ப­கு­தியும் இன்று துரி­த­க­தியில் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.
 
இவைகள் யாவும் ஒதி­ய­மலை பிர­தேசச் செயலர் பிரிவுக்குட்பட்டவை.
"காரவாய்க்கால் ,வேலங்குளம், நெடுங்கேனியான் முறிப்பு ஆகிய தமிழ்ப்பெயர்கள் ஏதும் இப்போது அங்கே இல்லை. அதாவேடுனுவேவ, கலியானபுர உள்ளிட்ட பல சிங்களப்பெயர்கள் இப்போது போதிதாக முளைத்துள்ளன. மேலும் தற்போது வயல் செய்து கொண்டிருக்கும் பகுதியில் , ஓதியமலைக்குளம் தாண்டி செல்லும்போது ராணுவத்தினர் தம்மை தாக்குவதாகவும் மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
 
அங்கு இடம்பெறும் நில,வள அபகரிப்புக்கள் பற்றி உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களிடம் தெரிவித்தேன் என்றுள்ளது.

ad

ad