புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2013

பெய்ரூட், நவ. 24- சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போ நகருக்கு அருகில் போராளிகள் வசமுள்ள இரண்டு மாவட்டங்களில் அதிபர் ஆசாத்தின் போர் விமானங்கள் நேற்று குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் மூன்று முறையாக நடத்தப்பட்டன. இதில் அல் பாப் பகுதிகளில் ஜெட் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர் என்று பிரிட்டன் மனித உரிமை அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஹல்வானியே பகுதியில் போராளிகளின் நிலைகளை கண்டறிய முடியாத போர்விமானங்கள், அப்பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த காய்கறி சந்தையின் மீது குண்டுகள் வீசின. இதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். மூன்றாவது முறையாக கராம் எல் பெய்க் மாவட்டத்தில் வீசப்பட்ட குண்டுகளுக்கு 7 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. ஆனால், அரசுத் தொலைக்காட்சி தீவிரவாதிகளின் நிலைகள் மீதுதான் நாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளோம் என்று இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ad

ad