புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013


பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் இன்று மாலை 4.20 அளவில் சிறப்பு விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார்.
இளவரசர் சார்ள்ஸ் அவரது மனைவி கமிலா பாக்கர் ஆகியோருடன் 56 அரச பிரதிநிதிகளும் இலங்கை வந்துள்ளனர் என எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
1973 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சகல பொதுநலவாய நாடுகளின் மாநாடும் பிரித்தானிய மகா ராணி இரண்டாவது எலிச பெத் தலைமையிலேயே நடைபெற்றன. அவர் கலந்து கொள்ளாத முதல் மாநாடு கொழும்பில் நடைபெறும் மாநாடாகும்.
மூன்று நாள் அரச முறை பயணமாக இலங்கை வந்துள்ள இளவரசர் சார்ள்ஸ், பிரித்தானிய மகா ராணிக்கு பதிலாக பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கண்டி, நுவரெலியா ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
அத்துடன் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் சில தலைவர்களை சந்திக்க உள்ள இளவரசர் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
அதேவேளை கொழும்பில் உள்ள தேசிய அரும்பொருட் காட்சியகம், பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவற்றும் இளவரசர் தம்பதி விஜயம் செய்ய உள்ளது.

ad

ad