புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2013

சரண் அடைந்த புலிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டார்கள்-இலங்கை ராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சனல்-4தொலைக்காட்சி செய்தி! ** மு.வே.யோகேஸ்வரன்

சென்ற 2009 மே மாதம் முள்ளி வாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டார்கள்..என்று ஒரு சிங்கள ராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி சனல் -4
செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் பத்திரிகை ஒன்று தனது பிரதான பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.மேற்படி சனல்-4 தொலைக்காட்சியும் அதன் செய்தியாளர்களும் கோமன் வெல்த் மாநாட்டுக்குச் சென்று அங்கே
தமது செய்திகளையும், பிரத்தியேகமாக இலங்கையில் நடைபெற்ற கடந்தகால அனர்த்தங்கள் பற்றியும் குறும்படம் வெளியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
உலகில் அனுமதிக்கப் பட்ட, சர்வதேச ரீதியாக பதிவு செய்யப்பட்ட, எந்த தொலைக் காட்சி சேவைகளையோ,அல்லது அதன் ஊடகவியலாளரையோ இலங்கைக்கு வரவேண்டாம் என்று தடுக்கும் அதிகாரம் இலங்கை அரசுக்கு இப்போது இல்லை.குறிப்பாக கோமன் வெல்த் மாநாட்டுக்காக ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் இலங்கை செல்வதற்காக விசாவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்,சிலர் அங்கே ஏற்கனவே சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. .அதேவேளை, பாலச் சந்திரன் படுகொலை-மற்றும் இசைப்பிரியா பற்றிய திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டு இலங்கை அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துவரும் மக் கெரெயும் இலங்கை செல்லவுள்ளார்..தான் இலங்கை அரசுக்கு பயந்து அங்கே போகாமல் விடப் போவதில்லை என்று சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் அவர் பகிரங்கமாக சொல்லியுள்ளார்.இந்த நிலையில் தமிழ் நாடு அரசு மக்களின் போராட்டங்களை நசுக்குவதில் முன் நிற்பது எந்த வகையில் மனிதாபிமானம் அற்ற செயலாகும்.சட்டங்கள் பேணப்பட வேண்டும் என்பது உண்மைதான்..ஆனால் அதனுடன் சேர்த்து விட்டுக்கொடுப்புகளும் இடம்பெறுவதில் தப்பில்லை.அதுவும் தமிழ் நாடு அரசு என்ற பெயரில்..
டக்ளசின் திடீர் பல்டி!
****************************
அதேவேளை இலங்கை அரசுக்கு இத்தனை காலம் வால் பிடித்துக் கொண்டிருந்த கூட்டுக் குழுவை சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் “,இசைப்பிரியாவின் அக்கிரமம்-படுகொலை, உலகத் தமிழர்களின் மனங்களில் தீராத வேதனையை ஏற்படுத்திவிட்டது என்றும்,இதுபற்றி இலங்கை அதிபர் விசாரிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.அடப்பாவி! நீ ராஜபக்சாவுடன் சேர்ந்து எத்தனை தமிழர்களை கொன்று குவித்திருப்பாய்? எத்தனை தமிழ்ப் பெண்களின் மானத்தை சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு இரையாக்கியிருப்பாய் ? ஈழத் தமிழர்கள் மறந்துவிடவா போகிறார்கள்?
சாத்தான் வேதம் ஓதுகிறது!’
இந்தியாவின் நிலை
***************************
இந்திய மத்திய அமைச்சர்களில் ஜி.கே.வாசன்தான் அன்றுமுதல் இன்றுவரை கோமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குபற்ற கூடாது என்று சொல்லிவருகிறார். இப்போது அவருடன் இணைந்து எ.கே.அந்தோனியும், பிரதமர் மாநாட்டில் பங்கு பற்ற கூடாது என்று அறிக்கை விட்டுள்ளார்.நிதியின் நாயகன், சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தமாதிரி இருக்கிறார்.இனி அவரின் முறைதான் அடுத்தது என்று நினைக்கிறேன்.ஐயா அந்தோனி அவர்களே..தமிழ் நாட்டு மக்களில் பலருக்கு வேண்டுமானால் மறதி இருக்கலாம்.ஆனால், எங்களுக்கு இல்லை.இனப்படுகொலை செய்த இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளித்ததில் தங்களின் பங்குதான் முக்கியம் என்பதை மறந்துவிட்டீர்களா?இந்த நிலையிலும் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குஷித் போன்றோர் இலங்கைக்கு செல்லவேண்டும் என்பதில் பிவாதமாக இருப்பதாக் தெரிகிறது.
இதுதான் இன்றைய இந்திய நிலைப்பாடு!

ad

ad