புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2013

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவதற்கு அந்தோனி உட்பட 5 அமைச்சர்கள் எதிர்ப்பு
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதற்கு இதுவரை ஐந்து இந்திய மத்திய அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தமிழகத்தைச் சேராத பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியும் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களே இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தமிழகத்தைச் சேராதவரான ஏ.கே.அந்தோனியும், தற்போது பிரதமர் இலங்கைக்குப் போவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்தோனி தவிர ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகிய இரு அமைச்சர்களும், இலங்கை பயணத்தை பிரதமர் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜெயந்தி நடராஜனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போது நாராயணசாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
5 மத்திய அமைச்சர்கள் இலங்கை பயணத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதால், பிரதமரின் நிலைப்பாட்டில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ad

ad