புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2013

காமன்வெல்த்! மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை ஜெயலலிதா கொண்டு வருவார் என தகவல்!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சட்டப்பேரவை திடீரென கூடுவதற்கான காரணம் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை. எனினும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொள்வார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகள் காரணமாக பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை  6 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வருவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

ad

ad