புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2013

 உலக அழகியாக வெனிசுலா நாட்டின் கேப்ரியேலா இஸ்லர் தேர்வு 
news
62வது உலக அழகி போட்டியில், 25 வயதான ‘மிஸ் வெனிசுலா’ பட்டம் வென்ற கேப்ரியேலா இஸ்லர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இந்திய அழகியாக தேர்வான மானசி மோகே உள்பட 86 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
 
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்த போட்டியில் பல நாடுகளை சேர்ந்த பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் நடுவர்களாக பங்கேற்றனர். 
 
வெனிசுலா நாட்டின் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் அவருக்கு, கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற அமெரிக்காவின் ஒலிவியா கல்ப்போ உலக அழகிக்கான மகுடத்தை சூட்டினார். இரண்டாவது இடத்தை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அழகியும், மூன்றாவது இடத்தை ஈக்குவடோர் நாட்டை சேர்ந்த அழகியும் வெற்றி பெற்றனர்.
 

ad

ad