புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013

ஏற்காடு இடைத்தேர்தல் : சேலம் மாவட்டத்தில் 63 லட்சம் பறிமுதல்
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 4ந்தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரம்
ஆரம்பித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. 


வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. 50 ஆயிரத்துக்கு அதிகமாக பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணம் இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. அதையும் மீறி முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று இரவு மும்முடி சோதனைச் சாவடியில் நடந்த சோதனையில் கேரளாவுக்கு சென்ற காரில் இருந்து ரூ.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு காரில் இருந்து ரூ.3.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல், கடந்த திங்கட்கிழமை (11-ம் தேதி) ஒரு காரில் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ad

ad