புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2013


குர்ஷித் இலங்கை பயணம்: ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம்: ஜெயலலிதா
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, தலைமைச் செயலக சட்டப்பேரவை மன்ற மண்டபத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட
இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.

அப்போது பேசிய ஜெயலலிதா, “காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை மந்திரி சல்மான் குர்ஷித் உள்பட யாரும் கலந்து கொள்ளக் கூடாது. சல்மான் குர்ஷித்தை அனுப்பி வைப்பது தமிழக மக்களை காயப்படுத்தும். ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம். மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு தனது வருத்தத்தை தெரிவிக்கிறது. 
எனவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இந்தியாவில் இருந்து யாரும் பங்கேற்கக்கூடாது என்று பேரவை மீண்டும் வலியுறுத்துகிறது. இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கவேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 2011-ல் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

ad

ad