புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2013

வடகொரியாவில் பயங்கரம்! 80 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வடகொரியாவில் திருட்டுத்தனமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த 80 பேருக்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தென் கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வட கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையும் மீறி திருட்டுத்தனமாக பார்த்த 80 பேருக்கு வடகொரியா அரசு மரண தண்டனை விதித்தது.
இதனையடுத்து கடந்த 3ம் திகதி 7 நகரங்களில் அந்த 80 பேர் பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது, துறைமுக நகரான வான்சனில் சுமார் 10,000 பொது மக்களை விளையாட்டு அரங்கம் ஒன்றுக்கு அரசு அதிகாரிகள் வரவழைத்துள்ளனர்.
இவர்கள் முன்னிலையில் இந்த கொடூர தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ad

ad