புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2013

இன்டர்போல் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் 80 இலங்கையர்கள்! கைது செய்ய விசாரணைகளை ஆரம்பம்
பயங்கரவாத நடவடிக்கைகள், நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ( இன்டர்போல்)  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கைக்கு வெளியில் பல நாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களில் நான்கு பேர் பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர்.
பிரித்தானியாவில் இருக்கும் நான்கு பேரில் ஒருவர் வங்கி உரிமையாளர் எனவும் இவர் விடுதலைப் புலிகளின் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் என கூறப்படுகிறது.
இவர்களை கைது செய்ய ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார், இன்டர்போல் பொலிஸாருக்கு உதவி வருவதாக தெரியவருகிறது.
இரண்டாம் இணைப்பு
இலங்கையைச் சேர்ந்த 80 பேர் இன்டர்போல் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கைகள், நிதி மோசடிகள் மற்றும் வேறும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் ஐந்து பேர் பிரிட்டனில் வாழ்ந்து வருகின்றனர்.

ad

ad