புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2013

கிளிநொச்சியில் வலைப்பாடு கிராஞ்சி தேரவில் ஆகிய கிராமங்களில் 52 பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டதாக தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்தன கடந்த புதன் கிழமை அது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வினாவப்பட்ட போது பிராந்திய சுகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் திருமதி.யூட் கட்டாய கருத்தடை செய்யவில்லையெனவும் பெண்கள் விரும்பியே செய்ததாகவும் தெரிவித்தார் அதுவும் தற்காலிக கருத்தடையெனவும் அவர்கள் அதனை நினைத்த நேரத்தில் நீக்க முடியுமெனவும் குறிப்பிட்டார் அவ்வாறு வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானதென்றும் தெரிவித்தார் இன்று மனித உரிமைகள் பற்றி பேசப்படுவதாக சொல்லி அழைத்தார்கள் நானும் சென்றேன் அந்த கலந்துரையாடலில் ஊடகவியலாளர் ஒருவர் இந்த கருக்கலைப்பு பற்றி பேசிய போது எனது செய்தி மூலமான வைத்தியர் திருமதி.யூட் தெரிவித்த விடயத்தை குறிப்பிட்டேன் உடனே அருட் தந்தை கமலானந்தன் எழுந்து கட்டாய கருத்தடை செய்ததாகவும் அதனால் பல குடும்பத்திலே பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார் உண்மை எது நடந்ததா நடக்கவில்லையா? இதிலே யார் பொய் சொல்கிறார்கள்? அதிகாரிகள் பகிரங்கமாக ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் இது தொடர்பில் கட்சி வேறுபாடின்றி அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பெரிய உண்மையை கண்டறிய ஒரு சிறிய பொய் கூட உதவும் என்பது ஊடகவியலில் சொல்லப்பட்டுள்ளது அதனை இன்று அனுபவபூhவமாக உணர்ந்தேன் அரசியல் தலைமைகள் சரியாக செயற்பட்டால் உண்மை வெளிவரும் மாலை சுகாதார இமைச்சருடன் தொடர்பு கொண்டு கேட்டேன் தனக்கு அறிக்கை கிடைத்துள்ளதாகவும் நாளை அது தொடர்பில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார் நாளை பார்க்கலாம்

ad

ad