புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2013

கொழும்பு சூதாட்ட மையத்துடன் அமைச்சர்களின் மனைவியருக்கு உண்டான தொடர்பு அம்பலப்படுத்தப்பட வேண்டும்
அண்மையில் கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்ட சூதாட்ட மையத்துடன் அமைச்சர்களின் மனைவியருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் அரசாங்கம் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது. 
நகர மண்டபத்திற்கு அருகாமையில் இயங்கி வந்த சூதாட்ட மையத்தை முற்றுகையிட்ட 23 பொலிஸ் உத்தியோகத்தர்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த சூதாட்ட மையம் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாருடைய ஆலோசனைக்கு அமைய இந்த சூதாட்ட மையம் இயங்கியது, பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எதற்காக இந்த மையத்திற்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
கசினோ சூதாட்ட மையங்களை சுற்றி வளைக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பேச வேண்டிய அவசியமில்லை.
இந்த சூதாட்ட மையத்தில் சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் என்ன காரணத்திற்காக 23 பொலிஸ் உத்தியோகத்தாகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad