புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013

தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் ...

நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தமிழ்நாடு உதவ வேண்டும்

இலங்கைத் தமிழ் மக்கள் மீது தமிழ்நாட்டுக்கு உண்மையான அக்கறை இருப் பின் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் நேர்மையான நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு உதவ வேண்டும். அதைவிடுத்து இங்கு தனிநாடொன்றை உருவாக்க
நினைப்பார்களாயின் அதை கடுமையாக நாம் எதிர்ப்போம் என்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுநலவாய உச்சிமாநாட்டுக்கான சர்வதேச ஊடக நிலையத்தை பார்வையிட பிரதி சபாநாயகர் நேற்று வருகை தந்திருந்தார். இங்கு செய்தி சேகரிப்புக்காக தமிழகத் திலிருந்து வருகை தந்துள்ள இந்திய தமிழ்த் தொலைக்காட்சி சேவையான புதிய தலைமுறைக்கு கருத்து வெளியிட்ட போதே பிரதி சபாநாயகர் சத்திம வீரக்கொடி இந்த கருத்தை தெரிவித்தார்.
அவர் இதன்போது மேலும் பேசுகையில்,
“பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதேபோல், நல்லிணக்க நடவடிக் கைகளையும் அரசாங்கம் நேர்மையாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் மக்கள் மீது தமிழ்நாட்டிற்கு உண்மையான அக்கறை இருக்கும் பட்சத்தில், எமது அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகக்கு உதவ வேண்டும்.
அதைவிடுத்து இங்கு தனி நாடொன்றை உருவாக்க நினைப்பார்களாயின் அதை நாம் எதிர்ப்போம். எனது தனிப்பட்ட கருத்து யாதெனில், அதிக தமிழ் மக்கள் வாழும் இடம் என்ற வகையில் தமிழ்நாடே தனிநாடொன்றுக்கு உகந்த இடமாக இருக்கும். எப்படியிருப்பினும், இந்தியாவுட னான உறவு என்பது எமக்கு மிக முக்கியமானதாகும்” என்றும் கூறி னார்.

ad

ad