புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2013

யாழ். நூலகத்திற்கு முன்பாக பதற்றம் - அனைத்துலக பிரசன்னத்தின் முன் கண்ணீர் மல்க காத்திருந்த மக்கள் மீது காட்டுமிராண்டித்தனம்!

அனைத்துலககத்தின் பிரச்சன்னத்தை வெளியேற்றி விட்டு சாட்சியமற்ற போரினை தமிழர்கள் மீது நடத்திய சிங்களம், தற்போது அனைத்துலகத்தின் பிரசன்னத்தின் முன்னேயே தமிழர்கள் மீதான காட்டுமிராண்டித்தனத்தை யாழ் மண்ணில் காட்டியுள்ளது.
யாழ்குடாவுக்கு வந்திறங்கிய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் யாழ் பொதுநுலகத்தில் வட மாகாணசபை முதல்வரை சந்தித்துக் கொண்டிருந்தவேளை, வெளியே கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்த காணாமல் போனோரது உறவுகளினால் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை சிறிலங்காவின் கலகம் அடக்கும் காவல்துறை மேற்கொண்டுள்ளது.
யாழ். நூலகத்திற்கு முன்பாக பதற்றம்
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதை அடுத்தே அங்கு பெரும் பதற்றம் நிலவுவதாகவும்
இதேவேளை, பொது நூலகத்திற்கு  வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் வாகனங்களை அங்கிருந்து நகரவிடாமல் பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர். 

ad

ad