புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2013




             "தமிழகத்தின் முதல் நக ராட்சிகளுள் ஒன்றான எங்கள் தேவகோட்டை, தற்போது லஞ்சக் கோட்டையாக மாறிவிட்டது'’என புகார் குரல் எழுப்புகிறார்கள் ஏரியாவாசிகள்.

சேர்மன் அ.தி.மு.க. சுமித்ரா. ஆணையர் சரவணன். இருவருக்கும் ஈகோ யுத்தம் தீவிரமாக நடந்துவரும் நிலையில் நாம் அதிரடியாக ஸ்டிங் ஆபரேஷனில் இறங்கினோம்..


நகர அ.தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் கார்த்திகேயன் நம்மிடம், ""சொத்துக்களின்
மதிப்பிற்கு ஏற்ப, ஏரியா அடிப்படையில் வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் நகராட்சி வரி விதிப்பது வழக்கமான ஒன்று. குறிப்பா சொல்லணும்னா, இந்த தேவகோட்டையில் "ஏ' பிளாக்கில் இருக்கும் வீடுகளுக்கு, சதுர அடிக்கு ரூ.2.90-பைசாவிலிருந்து ரூ3.50 பைசா வரை வசூலிப்பதும், "பி' பிளாக்கில் ரூ.1.90 பைசாவரை வசூலிப்பதும் வழக்கமா இருக்கு. வணிக ரீதியிலான இடங்கள்ன்னா சதுர அடிக்கு ரூ.5.85 பைசா வீதம் வசூலிக்கிறார்கள். இதில்தான் கொள்ளை லாபத்தைப் பார்க்க ஆரம்பிச்சிருக் காங்க. எப்படின்னா... உதாரணத்திற்கு, ஒரு வீட்டிற்கு ஆண்டுக்கு ரூ.3,000 வரி வருதுன்னா, அந்த வீட்டின் உரிமை யாளரிடம் "எங்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொ டுத்துடுங்க. வீட்டு வரியை 300 ரூபான்னு ஆக்கிடுறோம். இதன் பிறகு இந்த ரூபாயை மட்டும் நீங்க ஆண்டு தோறும் கட்டினால் போதும்'னு ஆசை காட்டி 10 ஆயிரத்தை வாங்கிடறாங்க. வருடந் தோறும் ரூ.2,700 மிச்ச மாகுதேன்னு அவங் களும் பணத்தைக் கொடுத்துடறாங்க. இப்படி தேவகோட்டை நகராட்சியில் கணக்குப் போட்டா, ஆண்டுக்கு பல லட்ச ரூபாய் நக ராட்சிக்கு இழப்பாகுது. இப்படி பில் கலெக் டர்கள் மூலம் வசூல் நடத்தப்படுவது தொ டர்பா சேர்மன் சுமித்ராவுக்கு நிறைய புகார்கள் போனது. பில் கலெக்டர்களில் ஒருவ ரான செல்வக்குமாரை அந்தப் பதவியில் இருந்து இடமாற்றம் செய்தார். அவரை அதே போஸ்ட்டிங்கில் உட்காரவச்சிட் டார் ஆணையர் சரவணன். இதே நிலையில்தான் தமி ழகத்தில் இருக்கும் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்பு கள் இருக்கு. இதை அரசு கவனமாக விசாரிக்கணும்'' என்றார் அழுத்தமாய். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளரான காமராஜோ ""இங்க திருப்பத்தூர் சாலை யில், வீட்டு எண் 499-ல் வசிக்கும் ஆசிரியை சாந்திக்கிட்ட போய், பில் கலெக்டர் செல்வக்குமாரும், காசி என்பவரும் வீட்டுவரியைக் குறைக்க 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொல்லி மிரட்டியிருக்காங்க'' என்றார் காட்டமாய்.

இப்படி  ஆதாரப்பூர்வமான புகார்கள் குவிந்ததால், ஸ்டிங் ஆபரேசனாக லஞ்சம் வாங்கும் பில் கலெக்டர்களில் ஒருவரான காசி என்பவரைக் குறிவைத்தோம். அவருக்குத் தெரிந்த நண்பர் மூலமாகவே அவரிடம் பேச வைத்தோம். அப்போது அவருக்குத் தெரியாமலே வீடியோ கேமரா அவர்களின் உரையாடலை இம்மி பிசகாமல் பதிவுசெய்ய ஆரம்பித்தது. அந்த உரையாடல் இதோ...

நண்பர் : வாங்க உட்காருங்க.

காசி : என்ன சார். எதுக்கு என்னைய வரச் சொன்னீங்க..?

நண்பர் : இல்ல, சும்மாத்தான். ஆமா, அந்த டீச்சர் வீட்டிற்குப் போனீங்களே என்ன பிரச்சனை?

காசி : அந்தம்மாக்கிட்ட பத்தாயிரம் கேட்டோம்.

நண்பர் : லஞ்சமாகக் கேட்டீங்க... அப்படித்தானே?

காசி : இல்ல சார். எல்லா இடத்திலேயும் நடக்குறது தானே சார். அதான் கேட்டோம். செல்வக்குமார் சார்தான் கேட்டார். நானும் அவர்கூட இருந்தேன்.



நண்பர் : உங்களுக்குத்தான் எல்லா ரூபாயும், அப்படித்தானே..?

காசி :  கொஞ்சம்தான் எடுத்துக்குவேன்.

நண்பர் : ம் ம் ம் ம் ம்... 

காசி: வாங்குகிற பத்தாயிரத்தில் கமிஷனருக்கு 1500, ஆர்.ஐ.க்கு 1000, பில்டிங் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1000. மதுரையிலுள்ள ஆர்.டி. எம்.ஏ. ஆபீஸிற்கு மாசம் 20 ஆயிரம். மிச்சமுள்ளதைத்தான் நாங்க பிரிச்சுக்குவோம்.

நண்பர் : அப்புறம்...

காசி : மாந்தோப்பு வீதியிலுள்ள சிவக்குமார் டாக் டருக்கு எதிரிலுள்ள கடைகளுக்கு 25,000 கமிஷனர் கேட்டாரு. இதிலெல்லாம் நாங்க கலந்துக்கலை.

-இப்படியாக பில் கலெக்டர் காசியின் ஊழல் வாக்குமூலம். அழுத்தமாகப் பதிவானது.

சுமித்ரா ரவிக்குமாரிடம் நாம் பேசிய பொழுது, ""உண்மைதாங்க. அந்த டீச்சர் மட்டு மல்ல, ஊரிலுள்ள மக்களிடமிருந்து எத்தனை யோ புகார்கள் வந்தன. அதனடிப்படையில் நக ராட்சியில் தீர்மானம் வைத்து, செல்வக்குமாரை நீக்கினோம். இது சம்பந்தமாக நகராட்சிகளின் தலைமை அலுவலகம், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகங்களுக்கும் தபால் அனுப்பியுள்ளோம். அதிகாரிகள் மட்டத்தில் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கலை. மறுபடி எப்படி செல் வக்குமார் அதே பதவிக்கு வந்தார்னு அதி காரிகள்தான் பதில் சொல்லணும்'' என்றார்.

கமிஷனர் சரவணனிடம் கேட்டபோது ""நான் நேர்மையான அதிகாரி. அந்த மாதிரி பில் கலெக்டர் காசி கூறியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. நகராட்சி சேர்மனும் அவர் கணவர் ரவிக்குமாரும் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்'' என்றார் அழுத்தமாய்.

ஒரு நகராட்சியினால் அரசுக்கு வரி இழப்பு கோடி ரூபாய் என்றால் 125 நகராட்சி களைக் கொண்ட தமிழகத்தில், அரசு அதிகாரி கள் அரசுக்கு ஏற்படுத்திவரும் இழப்பு எவ்வளவு இருக்கும்? நினைக்கும்போதே கிறுகிறுக்கிறது.                     

-நா.ஆதித்யா


 உஷ்!

பாளையக்காரர் கோட்டையில் பட்டாளத்துல இருந்தவர்களுக்கான ஒரு பேரங்காடி  இருக்கு. அங்கு வந்த அதிகாரி மனைவி ஒருத் தரை, கடை ஊழியர் ’சீண்டல்வதை’ செய்ய, காக்கி களும் கடுமை காட்ட..அவர்களின் விசாரணை யைக் கண்காணிக்க, குற்றப் புலனாய்வுத்    துறையில் இருந்து வந்தார்கள். இதுக்குப் பிறகும், இன்னொரு பெண்மணியையும் ’சீண்டல்வதை’ செய்திருக்கிறான், அதே போக்கிலி. இந்த முறை, காக்கிகளே சமாதானம் செய்து, விவகாரத்தையும் அமுக்கிவிட்டார்கள். அந்த அங்காடியின் நிர்வாகி, ’இணைந்த கை கள்’நடிகரும் அம்மை பக்கம் தாவிய, முரசு கட்சி ச.ம.உ.வின் உறவினராம்!

ad

ad