புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2013

கமரூனைச் சந்திக்க மறுப்பு தெரிவித்த ஜனாதிபதி மகிந்த: விடாபிடியில் பிரித்தானியா
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்திக்க ஜனாதிபதி மகிந்த இணக்கம் தெரிவிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
த கார்டியன் இணையத்தளம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் கமரூன் கலந்து கொண்ட பின்னர், தன்னுடன் தனியான சந்திப்புக்கு இன்னும் மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவிக்கவில்லையனெ டவுனிங் வட்டாரங்கள் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளன.
தனது பயணத்தின் போது, ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்தித்து, படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், ஆட்கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்ப பிரித்தானியப் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் மகிந்தவை சந்திக்கும் விடயத்தில் பிரித்தானியா தெளிவாக உள்ளது என்றும், அதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புவதாகவும பிரித்தானிய அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால், இலங்கை அதற்கு இணங்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad