புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013

இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் இராணுவமயப்படுத்தல் தொடர்கிறது! பிபிசி ஊடகம்
இலங்கையில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அங்கு சகல இடங்களும் இராணுவமயப்படுத்தப்பட்டு வருவதாக பி.பி.சி வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்திக் தொகுப்பில்  கூறப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் சகல இடங்களிலும் இராணுவம் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளது, இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன.
போர் முடிந்த பின்னரும் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் மேலும் மேலும் இராணுவயமயப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனை தவிர அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வர்த்தகம், சுற்றுலா துறை, காய்கறி வர்த்தகம் முதல் சகலவற்றிலும் இராணுவத்தின் பிரசன்னம் இருக்கின்றது.
சில குழுக்கள் பௌத்த மதத்தை பயன்படுத்தி வன்முறைகளையும், இனவாதத்தையும் தூண்டி வருகின்றன.
எனினும் இதனை அரசாங்கம் கண்டிப்பதில்லை என்பதால் அதன் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad