புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2013

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு இலங்கைக்கு ஆதரவான சீனா, ரஷ்யா உட்பட 14 நாடுகள் தேர்வு
ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் இயங்கி வருகிறது.
47 உறுப்பு நாடுகளை கொண்ட இந்த கவுன்சிலில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரேசில், ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன.
உலக நாடுகளில் எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றதோ...? அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தருவதும் இந்த கவுன்சிலின் கடமையாகும்.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இந்த கவுன்சிலுக்கான புதிய உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படும்.
1-1-2014 அன்று 14 உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய நாடுகளை உறுப்பினர்களாக்கும் இரகசிய தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்த தேர்தலில் 16 நாடுகள் போட்டியிட்டன. ஐ.நா. சபையின் கோட்பாடுகளின் இந்த பதவிக்கு தகுதியற்ற 2 நாடுகள் புறக்கணிக்கப்பட்டன.
சீனா, ரஷ்யா, கியூபா, சவுதி அரேபியா, தென்னாபிரிக்கா, அல்ஜரியா, பிரிட்டன், பிரான்ஸ், மாலைதீவுகள், மசெடோனியா, மெக்சிகோ, மொராக்கோ, நமீபியா, வியட்நாம் ஆகிய நாடுகள் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் புதிய உறுப்பு நாடுகளாக நேற்று தேர்வு செய்யப்பட்டன.

ad

ad