புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2013

நடிகை - காங். எம்.பி. விவகாரத்தில் மர்மம் உள்ளது
என்கிறார் மாஜி முதல்வர்

 நடிகை ஸ்வேதாமேனன்,  பீதாம்பர குரூப் எம்.பி. மீதுகொடுத்த புகார் விஸ்வரூபம் எடுக்க கொல்லம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரே காரணம். இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து நடத்திய போராட்டங்கள் காரணமாக
போலீசார் பீதாம்பர குரூப் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.


இந்தநிலையில் ஸ்வேதாமேனன் திடீரென புகாரை வாபஸ் பெற்றது கம்யூனிஸ்டு கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான அச்சுதானந்தனிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு அவர்,  ’’ஸ்வேதா மேனன் புகாரை வாபஸ் பெற்றதன் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் உள்ளது. அது என்ன என்பதை அவர் தான் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
இது குறித்து கொல்லம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பிரசாந்த்,  ’’கேரள காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகள் ஸ்வேதாமேனனை மிரட்டி வழக்கை வாபஸ் பெற வைத்துள்ளனர்.
ஸ்வேதாமேனன் சொன்ன தகவலின் அடிப்படையில்தான் நாங்கள் புகார் கொடுத்தோம்.


இப்போது ஸ்வேதா மேனன் பிரச்சினையில் இருந்து ஒதுங்கி கொண்டாலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த பிரச்சினையை விடப்போவதில்லை. போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம். இதை மக்கள் மன்றத்துக்கும் கொண்டு செல்வோம்’’என்று கூறியுள்ளார்.

ad

ad